Sunday, March 17, 2024
மேலும்
    Homeசமூக வலைதளம்போலியான வைரல் காணொளிகள்; இதுவும் போலியா?

    போலியான வைரல் காணொளிகள்; இதுவும் போலியா?

    இந்து கடவுள் பிரம்மாவை பின்பற்றி தனது மகளையே முதியவர் திருமணம் செய்ததாக வைரலான காணொளி தற்போது போலியானது என தெரியவந்துள்ளது. 

    கடந்த சில நாட்களுக்கு முன்பு, இந்து கடவுள் பிரம்மாவை பின்பற்றி தனது மகளையே திருமணம் செய்துகொண்டதாக முதியவர் ஒருவரின் காணொளி வைரலானது. இந்தக் காணொளி முதலில் ‘ட்ரோல்’ என்ற ட்விட்டர் கணக்கில் இருந்து கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி பதிவிடப்பட்ட நிலையில், டெக்பரேஷ் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பரேஷ் சதாலியா என்ற யூடியூப் பக்கத்திலும் பதிவிடப்பட்டது. 

    மேலும், இந்தப் பக்கங்களில் இளம் பெண்ணை முதியவர் திருமணம் செய்வது போன்றும், மூதாட்டி ஒருவர் இளைஞரைத் திருமணம் செய்துகொள்வது போன்றும், ஒரு ஆண் இரண்டு பெண்களை திருமணம் செய்வது போன்றும் காணொளிகள் இருக்கின்றன. மேலும் இது போன்று திருமணம் தொடர்பான காணொளிகள் இந்தப் பக்கங்களில் அதிகம் இடம்பெற்றுள்ளன. 

    இதனிடையே சமீபத்தில் வைரலாக காணொளியில் முதியவருடன் இருக்கும் அந்தப் பெண் வேறொரு காணொளியிலும் இருப்பது தெரிகிறது.

    இப்படிப்பட்ட காணொளிகள் கதையாக எழுதப்பட்டு (ஸ்கிரிப்ட்) பின்னர் காணொளியாக எடுக்கப்படுவது தெரிகிறது. பிரபலமாகும் நோக்கில் இப்படிப்பட்ட காணொளிகளை தயார் செய்வதும் தற்போது தெரியவந்துள்ளது. 

    தொடர்ந்து இரண்டு படம் ஹிட்; சம்பளத்தை உயர்த்திய நடிகை..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....