Saturday, March 16, 2024
மேலும்
    Homeசிறப்பு கட்டுரைபலத்த காயத்துக்குள்ளான இளவரசி டயானா.. தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இறுதிச்சடங்கு

    பலத்த காயத்துக்குள்ளான இளவரசி டயானா.. தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இறுதிச்சடங்கு

    1961-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி எட்வர்ட் ஜான் ஸ்பென்சர், பிரான்சஸ் ரூத் ப்ரூக் ரோஷே ஆகியோரின் மகளாக பிறந்தவர்தான் டயானா. டயனாவின் குடும்பம் வர்த்தக ரீதியிலும், மதிப்பு ரீதியிலும் இங்கிலாந்தில் மிகப்பெரிய குடும்பமாகும். இவர்களது குடும்ப பெயர் இயர்ல் ஸ்பென்சர் ஆகும். 

    டயானாவிற்கு லேடி ஜேன் பெல்லோஸ் மற்றும் லேடி சாரா மெக்காக்யூடேல் ஆகிய 2 சகோதரிகளும், சார்லஸ் பென்சர் என்ற 1 சகோதரனும் இருந்தார்கள். மேலும், டயானா தனது பள்ளி படிப்பை ரிடில் ஒர்த் ஹால் மற்றும் வெஸ்ட் ஹீத் பள்ளிகளில் முடித்தார். 

    டயானா பள்ளி படிப்பை முடித்த பின்பு சுவிட்சர்லாந்தில் உள்ள இன்ஸ்டியூட் ஆல்பின் விடிமானட்டே என்ற கல்லூரியில் படித்தார். அதன் பின்பு லண்டனிற்கு திரும்பி அங்கு ஒரு கிண்டர் கார்டனில் பணியாற்றினார். அப்பொழுது தான் டயானாவுக்கு இங்கிலாந்து நாட்டின் இளவரசர் சார்லஸ் உடனான அறிமுகம் கிடைத்தது. டயானா மற்றும் சார்லஸ் குழந்தை பருவங்களில் ஒருவருக்கு ஒருவர் தெரியும். அதற்கு காரணம் என்னவென்று பார்த்தால், மகாராணி இரண்டாம் எலிசெபத்திற்கு சொந்தமான பார்க் ஹவுஸில் டயனாவின் குடும்பம் வாடகைக்கு இருந்ததுதான். அப்போது குழந்தைகளாக ஒருவருக்கொருவர் அறிமுகமாகியிருந்தனர். 

    பின்னாளில், டயானாவும், சார்லஸூம் ஒருவருக்கொருவர் காதல் வயப்பட்டனர். இதைத் தொடர்ந்து, 1981-ம் ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி இங்கிலாந்தின் இளவரசர் சார்லஸ் மற்றும் டயானா ஆகியோருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதன்பிறகு, அதே 1981-ம் ஆண்டு ஜூலை 29-ம் தேதி டயானாவிற்கும் சார்லஸிற்கும் திருமணம் செயிண்ட் பால் கதீட்ரல் ஆலயத்தில் நடந்தது. 

    இந்த திருமணத்திற்காக டயானாவிற்கு 25 அடி நீள, வெள்ளை நிற கவுன் 10 ஆயிரம் முத்துக்கள் பதிக்கப்பட்டு டிசைன் செய்யப்பட்டது. இந்த உடையை அணிந்து கொண்டு டயானா சர்ச்சிற்கு (ஆலயம்) வெளியே இருந்து உள்ளே செல்ல 3.5 நிமிடங்கள் ஆனதெல்லாம் அன்று பெரிய நிகழ்வுகளாக பேசப்பட்டது. இந்த திருமணம் தொலைக்காட்சிகளில் எல்லாம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. 

    இதையடுத்து 1982-ம் ஆண்டு ஜூன் 21-ம் தேதி டயானாவிற்கு பிறந்த முதல் குழந்தைக்கு வில்லியம்ஸ் என பெயரிட்டனர். 1984-ம் ஆண்டு பிறந்த இரண்டாவது ஆண் குழந்தைக்கு ஹென்ட்ரி சார்லஸ் ஆர்பர்ட் டேவிட் என பெயரிட்டனர். இவர்தான் தற்போது ஹாரி என அழைக்கப்படுகிறார்.

    இதன்பிறகு, 1992-ம் ஆண்டு டயானா மற்றும் சார்லஸ் இருவரும் பிரியலாம் என முடிவு செய்தனர். அதன்படி, 1996-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதிகாரப்பூர்வமாக பிரிந்துவிட்டனர். இருப்பினும், அவரிடம் இளவரசி என்ற ராஜகுடும்ப உரிமை இருந்தது. ஆனால் டயானா எந்த நேரம் வேண்டுமானாலும் அதை விட்டு தர தயார் என அறிவித்துவிட்டார். அன்றைய காலகட்டத்தில் எய்ட்ஸ் நோய் அதிகமாக பரவலில் இருந்தது. பல குழந்தைகளும் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, எச்ஐவி , எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக டயானா ஒரு அறக்கட்டளை துவங்கி அதன்மூலம் உதவி செய்தார். மகன்களின் வளர்ப்பு, தொண்டு செய்தல் என மிகவும் பிசியாக இருந்த டயானா எகிப்தில் உள்ள சினிமா தயாரிப்பாளர் டூடி ஃபாயித் உடன் டேட்டிங்கில் இருப்பதாக 1997ல் செய்திகள் வெளியாகின.

    இதையடுத்து, பாரீஸில் 1997ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி டயானா மற்றும் டூடி ஃபாயித் ஒரு காரில் செல்லும் போது அந்த கார் விபத்தில் சிக்கிவிடுகிறது. இதில் டூடி ஃபாயித் மற்றும் காரின் டிரைவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துவிட்டனர். டயானாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    பலத்த காயம் ஏற்பட்ட டயானா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட, அங்கு அவருக்கு அளித்த சிகிச்சை பலனளிக்கவில்லை. விபத்து நடந்து 2 மணி நேரத்தில் டயானா இறந்துவிட்டார். 

    டயானாவின் இறப்புக்கு செப்டம்பர் 1 முதல் 8-ம் தேதி வரை துக்கம் அனுசரிக்கப்பட்டது. மேலும், செப்டம்பர் 6-ம் தேதி டயானாவின் இறுதிச்சடங்குகள் நடைபெற்றது. இங்கிலாந்து மக்கள் பெரும் துயரத்தில் ஆழ்ந்திருந்தனர். இந்த இறுதிச்சடங்கானது உலகெங்கும் ஒளிபரப்பப்பட்டது. 

    டயானாவின் கல்லறை அவரது தீவின் ஆல்தோர்ப் பூங்காவில் அலங்கரிக்கப்பட்ட ஏரிகளில் ஒரு தீவில் உள்ளது. கல்லறைக்கு பாதுகாப்பளிக்கும் நான்கு கருப்பு ஸ்வாம்களை இந்த தளம் சூழப்பட்டுள்ளது. 36 வயதான ஓக் மரங்கள், அவரின் கல்லறையின் பாதையில் உள்ளன. 

    மேலும், புகழ்பெற்ற டயானா தனது 36-வது வயதில் மரணம் அடைந்தார். இதையடுத்து, பல கருத்துகள் இந்த விபத்து குறித்து முன்வைக்கப்பட்டது.இந்த விபத்து குறித்து பல வழியில் காவல்துறையினரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் நடந்த விசாரணையில் 1999ம் ஆண்டு காரின் டிரைவர் மது போதையில் இருந்ததால் தான் விபத்து நடந்ததாக காவல்துறையினர் அறிக்கை தாக்கல் செய்தனர். 

    வரலாற்றில் இன்று செப்டம்பர் 6-ம் தேதி இளவரசி டயானாவின் இறுதிச்சடங்கு நடைபெற்ற நாள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....