Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ஒத்தைக்கு ஒத்த ரெடியா? உதயநிதியை வம்பிழுக்கும் அமர் பிரசாத் ரெட்டி

    ஒத்தைக்கு ஒத்த ரெடியா? உதயநிதியை வம்பிழுக்கும் அமர் பிரசாத் ரெட்டி

    இங்கு திறமைசாலியானவர்கள் யார் என்பது பற்றி அண்ணாமலையுடன் தனியாளாக ஒத்தைக்கு ஒத்தை நேரில் நின்று விவாதிக்க சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலினுக்கு துணிவிருக்கிறதா என அமர் பிரசாத் ரெட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.

    தமிழகத்தில் பாஜகவை தனித்துவமிக்க கட்சியாக உருவாக்க வேண்டும் என்பதில் அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை தீவிரமாக செயல்பட்டு வருகிறார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பாஜக அதிமுகவுடன் மட்டுமின்றி தங்களுக்கு எதிராக பேசி வரும் பிற கட்சித் தலைவர்களையும் விமர்சிப்பதற்கு அவர் அஞ்சுவதில்லை.

    அப்படி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி ஒவ்வொரு அமைச்சர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக கூறி வரும் நிலையில், அவரின் குற்றச்சாட்டுகளை சமாளிக்க முடியாமல் அமைச்சர்களும் திக்குமுக்காடி வருகின்றனர் .

    இந்த நிலையில் தான் தற்போது மதுரையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பேசுபொருளாக மாறியுள்ளது. அண்ணாமலை தான் செருப்பு வீச்சுக்கு காரணம் என்ற குற்றச்சாட்டை திமுகவினர் வைத்துள்ளனர். இதனால் இந்த விவகாரத்தில் பிடிஆர், அண்ணாமலை இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டு, தமிழக அரசியலில் துரதிஷ்டம் அண்ணாமலை என்று பிடிஆரும், எனது கால் செருப்பு கூட பிடிஆர் ஈடாக மாட்டார் என அண்ணாமலையும் மாறி மாறி ஒருவரை ஒருவர் தாக்கி பேசியுள்ளனர்.

    இந்த நிகழ்வு இரண்டு கட்சியின் தொண்டர்கள் மத்தியிலும் மிகப்பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது இப்படியிருக்க போதா குறைக்கு பாஜக கட்சியினரை சீண்டி பார்க்கும் விதமாக திமுகவின் நாளேடான முரசொலியில் அண்ணாமலையை தனியாக விமர்சித்து கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அக்கட்டுரையில் அண்ணாமலை ஒரு தற்குறி, அரசியலை சாக்கடை ஆக்கி அதில் உழல துடிக்கிறார் என்ற விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது.

    இதற்கு பதிலளிக்கும் விதமாக அண்ணாமலைக்கு ஆதரவாக பாஜக இளைஞர் அணி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, பிரபல யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்திருந்த பேட்டியில் திமுக கட்சியை மட்டுமின்றி, அவர்கள் நடத்தும் குடும்ப ஆட்சியையும், உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடுகள் குறித்தும் விமர்சித்து பேசியிருந்தார் .

    அதில் இந்தியாவிலேயே மிகப்பெரிய கட்சி பாஜக தான். திமுக என்பது சாதாரண ஒரு மாநிலக் கட்சி. அதனால்தான் 10 கூட்டணி கட்சிகளின் உதவியை நம்பியே பயணித்துக் கொண்டிருக்கிறது. திமுக முழுக்க முழுக்க ஒரு குடும்பக் கட்சி, ஒரு குடும்பத்தில் இருப்பவர்கள் மட்டுமே தளபதி, இளைய தளபதி போன்ற இடங்களுக்கு வர முடிகிறது.

    அந்தக் கட்சியில் இருக்கும் மூத்த அரசியல் தலைவர்களே இதை எண்ணி மனக்குமுறலில் உள்ளனர். ஸ்டாலின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் அதிகாரம் பொறுப்பு கிடைக்கும். மற்றவர்கள் யாரும் எளிதில் மேலே வந்துவிட முடியாது.

    அண்ணாமலை நாளுக்கு நாள் தன்னைத்தானே செதுக்கிக் கொண்டு மக்கள் தலைவராக மாறி வருகிறார். அவர் கட்சிக்காக கொடுத்து வரும் பங்களிப்பு என்பது அளப்பரியது. யார் சிறந்தவர்கள் திறமையானவர்கள் என்பது பற்றி உதயநிதி ஸ்டாலினுக்கு நான் சவால் விடுகிறேன்.

    இதுகுறித்து எங்கள் மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் நேருக்கு நேராக ,ஒத்தைக்கு ஒத்தை நின்று விவாதிக்கத் உதயநிதி தயாரா? என்ற கேள்வியை முன் வைத்துள்ளார் .

    மேலும், பாஜகவை என்ன வேண்டுமானாலும் நீங்கள் பேசுவீர்கள், செய்வீர்கள் நாங்கள் எதிர்வினையாற்ற கூடாதா? மக்களுக்காக பேசக்கூடாதா? மக்களுக்காக போராட கூடாதா? பாஜக கட்சி எல்லாவற்றையும் இழந்து விட்டு வந்திருக்கிறது, இழப்பதற்கு இனி ஒன்றுமில்லை, திமுகவை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று பாஜக நினைக்கவில்லை, மக்கள் நினைக்கிறார்கள்.

    காரணம் திமுகவினரின் அராஜகம் என்பது வீடு கட்டுவதில் தொடங்கி, சாதாரண பெட்டிக்கடை நடத்துவது வரை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. யாரும் நிம்மதியாக இல்லை. எல்லாவற்றிலும், எல்லோரிடத்திலும் பணம் பறித்து வசூல் வேட்டையை நடத்தி வருகின்றனர். இதனால் இந்த கட்சியின் ஆட்சியே இனி வேண்டாம் என்று மக்கள் நினைக்கிறார்கள். இவ்வாறு அமர் பிரசாத் கூறியுள்ளார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....