Friday, March 24, 2023
மேலும்
    Homeதொழில்நுட்பம்பியூஜிபிலிமின் அடுத்த மின்னல்வேக இமேஜ் ப்ராசஸிங் எக்ஸ் டி30 2 கேமரா !

    பியூஜிபிலிமின் அடுத்த மின்னல்வேக இமேஜ் ப்ராசஸிங் எக்ஸ் டி30 2 கேமரா !

    முன்னணி கேமரா தயாரிப்பு நிறுவனமான பியூஜிபில்ம் நிறுவனம் அதிவேகமான இமேஜ் பிராசஸிங் கொண்ட எக்ஸ் டி30 கேமரா 2 என்ற மிரர்லெஸ் கேமராவை அறிமுகப்படுத்தியுள்ளது.

    Fujifilm X-T30 IIஇப்பொழுது இதை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ள பியூஜிபில்ம் நிறுவனம், சமீபகாலங்களாக அறிமுகப்படுத்தி வரும் எக்ஸ் சீரிஸ் வகையில் இது புது வகை ஆகும். இதில் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ள மென்பொருளில்  முன்பைவிட மேம்படுத்தப்பட்ட ஏ.எப் ஸ்பீட், ப்ரிசிஷன் மற்றும் இமேஜ் தர்ம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. இன்னும் சிறப்பாக, இந்த கேமராவின் டிஸ்பிளேயானது 1.63 மில்லியன் டாட் கொண்ட எல்.சி.டி டிஸ்பிளே ஆகும்.

    Fujifilm X-T30 II

    அதிகபட்சமாக இதில் 26.1 மெகாபிக்சல் எக்ஸ் ட்ரான்ஸ் CMOS 4 சென்சாரும், எக்ஸ் ப்ராசசர் 4 அதிவேக ப்ராசஸிங் இன்ஜினும் கொடுக்கப்பட்டுள்ளன. ஆகையால், இந்த கேமராவின் உதவியால் வீடியோக்களை 30 ப்ரேம் ரேட்டில் 4கே வாக எடுக்கலாம். மெகா பிக்ஸல் அதிகமாக இருப்பதால் போட்டோ நல்ல உயர் தரத்தில் கிடைக்கும்.

    பழைய பிலிம் கேமராக்களின் கிளாசிக் மாடலில் கருப்பு மற்றும் சில்வர் நிறத்தில் வரும் இந்த கேமரா பாடியின் விலை மட்டும் ரூபாய் 88,999 ஆகவும், 15-45 mm லென்ஸுடன் வரும் கேமெராவின் விலை 99,999 ஆகவும், 18-55 mm லென்ஸுடன் வரும் கேமெராவின் விலை 1,24,999 ஆகவும் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    chennai metro station

    மெட்ரோ பயணிகளின் கவனத்திற்கு! வாகனங்களை நிறுத்த புதியமுறை

    மெட்ரோ இரயில்‌ நிலையங்களில்‌ உள்ள வாகன நிறுத்துமிடங்களில்‌ பயணிகள்‌ தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு பணம்‌ செலுத்துவதற்கு பதிலாக மெட்ரோ இரயில்‌ பயண அட்டை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்‌ என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  பணமில்லா...