அமெரிக்காவில் டன் கணக்கில் சாப்பிடும் சீஸை பதுக்கிய குற்றத்திற்காக இரண்டு பெண்களை கைது செய்துள்ளது டெக்சாஸ் மாகாண போலீசார்.
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸில் வாழ்ந்து வருபவர்கள் ஆனா ரியோஜா மற்றும் மரியா கோன்சுயல்லோ டி யுரேனோ. இவர்கள் இருவரும் அரசால் வறுமையில் வாடும் மக்களுக்கு சத்துணவு உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவுகளை பதுக்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். இப்படி இவர்கள் பதுக்கிய உணவுகளின் பட்டியலானது, 49.1 டன் அமெரிக்கன் சீஸ் ஸ்லைஸ், 22.3 டன் பின்டோ பீன்ஸ், 1.6 டன் போல்ஜர்ஸ் காபி, 1.4 டன் மசிக்கப்பட்ட உருளைக்கிழங்கு மற்றும் 5000 கேலன் மாயோனிஸ் என இதன் அளவு நீண்டு கொண்டே செல்கிறது. இதன் மொத்த மதிப்பானது அமெரிக்க டாலரில் 1.2 மில்லியனைத் தாண்டுகிறது.
இவ்வாறு இவர்கள் கடத்தியப் பொருட்களை அமெரிக்காவின் எல்லைப்பகுதிக்குக் கொண்டு சென்று விற்பனை செய்துள்ளனர். இப்படியாகவே சுமார் 5 ஆண்டுகள் இவர்கள் இந்த திருட்டு வேலையைச் செய்து வந்துள்ளனர். இவை அனைத்தையும் விசாரணையின் மூலம் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ள டெக்சாஸ் மாகாண போலீசார், அவர்களது குற்றத்தினை சந்தேகங்களுக்கு இடமின்றி நிருபித்து காட்டியுள்ளனர். இவர்களுயடைய இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆனா ரியோஜாவுக்கு 30 மாதங்கள் சிறைத்தண்டனையும் மற்றும் மரிய கோன்சுயல்லோ டி யுரேனோவுக்கு 37 மாதங்கள் சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தனர்.