Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்மாணவர்களுக்கான இலவச மாணவர் சிறப்பு பேருந்து; கொடியசைத்து துவக்கி வைத்த துணைநிலை ஆளுநர்

    மாணவர்களுக்கான இலவச மாணவர் சிறப்பு பேருந்து; கொடியசைத்து துவக்கி வைத்த துணைநிலை ஆளுநர்

    புதுச்சேரியில் மாணவர்களுக்கான இலவச மாணவர் சிறப்பு பேருந்துகளை முதலமைச்சர் மற்றும் துணைநிலை ஆளுநர் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். மாணவர்களுக்கு வாரத்தில் 3 நாட்களுக்கு முட்டை வழங்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி அரசு பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில் மாணவர்களுக்கான இலவச சிறப்பு பேருந்தை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏ.எப்.டி பஞ்சாலை திடலில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக முதலமைச்சர் ரங்கசாமி, துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான இலவச பேருந்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும், பள்ளி கல்வித்தறை இயக்குநர் ருத்ரகவுடு, இணை இயக்குநர் சிவகாமி மற்றும் துணை இயக்குநர் பூபதி ஆகியோர் செய்திருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், கடந்த காலங்களில் 1 ரூபாய் பேருந்தாக மாணவர்களுக்கு இயக்கப்பட்டு வந்ததாகவும், எங்களுடைய அரசு பொருப்பேற்றதில் இருந்து மாணவர்களுக்கு இலவச பேருந்து இயக்க வேண்டும் என்று முடிவெடுத்து தற்போது மாணவர் இலவச பேருந்து துவக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், புதுச்சேரி, காரைக்காலில் 76 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.

    இதில் புதுச்சேரியில் 57 பேருந்துகளும்,காரைக்கலில் 18 பேருந்துகள் இயக்கப்படுகிறது. முதல் கட்டமாக தற்போது 57 பேருந்துகள் இயக்கப்படுகின்றது. மற்ற பேருந்துகள் விரைவில் இயக்கப்படும் என்றார். மேலும் மாணவிகள், மாணவர்களுக்கு என்று தனி பேருந்துகள் இயக்கப்படுகிறது என்று கூறிய அவர், மாணவர்களுக்கு மதிய உணவில் வாரம் இரண்டு தினங்கள் முட்டை வழங்கப்பட்டு வருவதாகவும் அதனை 3 ஆக வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளனர்.

    எனவே மாணவர்களுக்கு வாரத்திற்கு மதிய உணவுடன் 3 நாட்கள் முட்டைகள் வழங்கப்படும் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், மகளிருக்கான கல்லூரி இன்று முதல் துவங்கப்பட்டுள்ளது. இலவச சீருடை, சைக்கிள், மடிக்கனிணி ஆகியவை விரைவில் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.

    சென்னையில் சர்வதேச திரைப்பட விழா; 51 நாடுகள் பங்கேற்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....