Saturday, March 16, 2024
மேலும்
    Homeதொழில்நுட்பம்இந்தியர்களுக்கு ஃபாக்ஸ்கான் நிறுவனம் சொன்ன ஹேப்பி நியூஸ்! பெரும் இழப்பால் கடுப்பில் சீனா

    இந்தியர்களுக்கு ஃபாக்ஸ்கான் நிறுவனம் சொன்ன ஹேப்பி நியூஸ்! பெரும் இழப்பால் கடுப்பில் சீனா

    இந்தியாவில் செயல்பட்டு வரும் ஆப்பிள் நிறுவனத்தின் ஒப்பந்த நிறுவனமான ‘ஃபாக்ஸ்கான்’ தொழிற்சாலையில் பணியாளர்களை அதிகரிக்க திட்டமிட்டு இருக்கிறது. 

    ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி தொடர்ந்து பாதிப்படைந்து வருவதற்கு கொரோனா காரணமாக சீனாவில் பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் தான் என சொல்லப்படுகிறது. 

    இதனால், தனது தயாரிப்பை சரி செய்யும் விதமாக, இந்திய ஆலையில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கையை நான்கு மடங்கு அதிகரிக்க ஃபாக்ஸ்கான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

    சீனாவில் உள்ள ஜென்ஜோ நகரில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் மிகப்பெரிய ‘ஐபோன்’ தயாரிப்பு ஆலை இயங்கி வருகிறது. இந்நிலையில், இந்த நகரத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், சீன அரசு அங்கு சில தடை உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. மேலும், ஆலையை தற்காலிகமாக மூடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. 

    பண்டிகை காலம் என்பதாலும், ஆண்டின் இறுதி காலம் என்பதாலும், விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ‘ஐபோன் 14’ தயாரிப்பில் தற்போது சிக்கல் நீடித்து வருகிறது. 

    இதனால், தைவான் பகுதியைச் சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் இந்தியாவில் கூடுதலாக 53 ஆயிரம் பேரை பணியமர்த்த திட்டமிட்டிருக்கிறது. 

    இதையும் படிங்கரெட் அலட்டுக்கு மேல் சீர்காழியில் இரண்டு மடங்கு மழை! இந்த நூற்றாண்டின் உச்சம் என வானிலை மையம் தகவல்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....