Friday, March 15, 2024
மேலும்
    Homeஅறிவியல்இந்தியாவில் தெரிந்த சந்திர கிரகணத்தின் இறுதி நிலை

    இந்தியாவில் தெரிந்த சந்திர கிரகணத்தின் இறுதி நிலை

    இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் இன்று தெரிந்தது. 

    இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் இன்று நிகழ்ந்தது. பூமியின் உள்நிழல் நிலவின் மீது விழுவதால் நிலவு மறைப்படும். 

    சந்திர கிரகணத்தின் போது நிலவை அடையும் சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தின் வழியாக பயணம் செய்வதால் நிலவானது சிவப்பு நிறமாக காட்சியளிக்கும். அந்தச் சமயம், சூரிய உதயம் மற்றும் மறையும் பொழுது அதன் ஒளி நிலவின் மீது எதிரொளிக்கும். அதனால் நிலவு ரத்த நிறத்தில் கண்களுக்கு (Blood moon) தெரிகிறது. 

    சென்னையில் 5.38 மணியில் இருந்து மாலை 6.11 மணி வரை சுமார் 40 நிமிடங்கள் வரை கிழக்கு தொடுவானில் பகுதி சந்திர கிரகணத்தை பலரும் வெறும் கண்களால் பார்த்தனர். சில பகுதிகளில் மேகம் மூடிய நிலையில் இருந்ததால் சரியாக பார்க்க முடியவில்லை. 

    மேலும் அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் சந்திர கிரகணத்தின் இறுதி நிலைகளைக் காண முடிந்தது.

    இந்தச் சந்திரக் கிரகணம் வடக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பகுதிகளில் தெரிந்தது. 

    இதனைப் பலரும் தங்கள் செல்போன்களிலும் தொலைநோக்கி மூலமும் புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

    அடுத்த பகுதி சந்திர கிரகணத்தை அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி தான் தமிழகத்தில் காண முடியும்.

    இதையும் படிங்க: கஞ்சா அடிச்சா தப்பில்ல… ஆனா தப்பு ! பாஜக பிரமுகர்களின் ‘உல்டா புல்டா’ கருத்துக்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....