Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்கஞ்சா அடிச்சா தப்பில்ல... ஆனா தப்பு ! பாஜக பிரமுகர்களின் 'உல்டா புல்டா' கருத்துக்கள்

    கஞ்சா அடிச்சா தப்பில்ல… ஆனா தப்பு ! பாஜக பிரமுகர்களின் ‘உல்டா புல்டா’ கருத்துக்கள்

    பாஜக-வின் இரு வேறு தலைவர்கள் இருவேறு கருத்துகளை முன்வைத்துள்ளது தற்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

    ஜானார்தன் மிஸ்ரா – மத்திய பிரதேசத்தின் மாநில பாஜக அமைச்சர். இவர் நீர் பாதுகாப்பு தொடர்பாக நேற்று நடந்த கருத்தரங்கில் பங்கேற்றார். இந்த கருத்தரங்கானது ரீவா நகரில் நடைபெற்றது. 

    இந்த கருத்தரங்கில் ஜானார்தன் மிஸ்ரா பேசியதாவது;

    நீர் இல்லாமல் நிலங்கள் எல்லாம் வறண்டு போய்விட்டன. மது குடியுங்கள், புகையிலை சாப்பிடுங்கள், கஞ்சா குடியுங்கள், தின்னர் வாசனையை நுகருங்கள், ‘அயோடெக்ஸ்’ சாப்பிடுங்கள் ஆனால் நீரின் முக்கியத்துவத்தை உணருங்கள். 

    பெரும்பாலான நீர்நிலைகள் வறண்டு வருகிறது. போர்வல் மற்றும் டியூப்வல் மூலம் தண்ணீரை எடுத்து நிலத்தடி நீரை மக்கள் காலி செய்கின்றனர். உங்கள் பணத்தை எப்படி வேண்டுமானாலும் வீண்டியுங்கள் ஆனால் நீர் முதலீடு செய்வது முக்கியமானது.

    இவ்வாறு அவர் பேசினார். 

    ‘மது குடியுங்கள், புகையிலை சாப்பிடுங்கள், கஞ்சா குடியுங்கள், தின்னர் வாசனையை நுகருங்கள்’ என ஜானார்தன் மிஸ்ரா பேசியது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. 

    இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கடந்த சில நாட்களுக்கு முன் மதுரையில் கல்லூரி மாணவிகளிடம் இளைஞர்கள் சிலர் அத்துமீறி அடாவடியில் ஈடுபட்டது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

    இதையும் படிங்கதயவு செய்து மூடுங்க? டாஸ்மாக் ஊழியர்கள் காலில் விழுந்த பாமக எம்.எல்.ஏ – பதறிப்போன மக்கள்

    அப்போது, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது;

    கட்டுக்கோப்பாக இருந்த தமிழகத்தில் மதுவும், கஞ்சாவும் இளைஞர்களை சீரழித்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் காவல் துறையின் கையை கட்டிபோட்டு உள்ளார்கள். மது மற்றும் போதை பொருள் கலாசாரத்தை ஒழித்தால் இளைஞர்கள் சமுதாயத்தோடு ஒன்றி வருவார்கள். அவ்வாறு ஒழிக்கவில்லை என்றால் இளைஞர்கள் வேறு சமுதாயம் வேறு என்ற நிலை வந்துவிடும். காவல்துறைக்கு சில அதிகாரங்கள் கொடுக்க வேண்டும். 

    இவ்வாறு தெரிவித்தார். 

    பாஜக-வின் இரு வேறு தலைவர்கள் இருவேறு கருத்துகளை முன்வைத்துள்ளது தற்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது. மத்தியில் ‘மது குடியுங்கள், புகையிலை சாப்பிடுங்கள், கஞ்சா குடியுங்கள், தின்னர் வாசனையை நுகருங்கள்’ என்பதும், ‘மது மற்றும் போதை பொருள் கலாசாரத்தை ஒழித்தால் இளைஞர்கள் சமுதாயத்தோடு ஒன்றி வருவார்கள்’ என்று அண்ணாமலை தெரிவித்திருப்பதும் முரணாக உள்ளதால் ஒரே கட்சியில் ஒரே சித்தாந்தம் இல்லையா என்ற கேள்வியை மக்களிடையே உருவாக்கியுள்ளது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....