Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்சர்ச்சையான 'இந்து' வார்த்தை; நான் கூறியதில் எந்த தவறும் இல்லை.. கர்நாடக காங்கிரஸ் தலைவர்

    சர்ச்சையான ‘இந்து’ வார்த்தை; நான் கூறியதில் எந்த தவறும் இல்லை.. கர்நாடக காங்கிரஸ் தலைவர்

    ‘இந்து என்ற வார்த்தை மிக மோசமானது என்று தான் கூறியதில் தவறில்லை’ என கர்நாடக காங்கிரஸ் கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். 

    கர்நாடக மாநிலம், பெலகாவியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய கர்நாடக காங்கிரஸ் கட்சித் தலைவர் சதீஷ் ஜார்கிஹோலி, “இந்து என்ற வார்த்தை பாரசீக மொழி. அது மிகவும் மோசமான அர்த்தம் கொண்டது என்று தெரிவித்தார்.

    மேலும் அவர், கர்நாடகாவில் உள்ள மக்கள் மீது ஒரு வார்த்தையும், ஒரு மதமும் வலுக்கட்டாயமாக திணிக்கப்படுகிறது. இது தொடர்பாக முறையான விவாதம் நடத்தப்பட வேண்டும்” என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

    இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கு எதிராக சிலர் கருத்து தெரிவித்து வந்தனர்.

    இதனிடையே, மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 

    நான் சொன்னதில் தவறில்லை, பாரசீக வார்த்தை (இந்து) எப்படி வந்தது என்பது பற்றி நூற்றுக்கணக்கான பதிவுகள் கிடைக்கின்றன. 

    சுவாமி தயானந்த சரஸ்வதியின் ‘சத்யார்த்த பிரகாஷ’ புத்தகத்திலும், டாக்டர் ஜி.எஸ்.பாட்டீலின் ‘பசவ பாரத’ புத்தகத்திலும், பாலகங்காதர திலக்கின் ‘கேசரி’ நாளிதழிலும் இதுபற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. 

    இவை மூன்று நான்கு எடுத்துக்காட்டுகள், தேவையெனில் விக்கிபீடியாவில் இதுபோன்ற பல கட்டுரைகள் கிடைக்கின்றன, தயவுசெய்து அதைப் படிக்கவும்.

    இவ்வாறு அவர், தெரிவித்துள்ளது மீண்டும் கர்நாடக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

    இதையும் படிங்ககோவை கார் வெடிப்பு சம்பவம்; கைது செய்யப்பட்ட 6 பேருக்கு 22ம் தேதி வரை நீதிமன்ற காவல்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....