Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகோவை கார் வெடிப்பு சம்பவம்; கைது செய்யப்பட்ட 6 பேருக்கு 22ம் தேதி வரை நீதிமன்ற...

    கோவை கார் வெடிப்பு சம்பவம்; கைது செய்யப்பட்ட 6 பேருக்கு 22ம் தேதி வரை நீதிமன்ற காவல்..

    கோவை கார் வெடிப்பு சம்பவம் கடந்த மாதம் 23 ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஜமேஷா முபீன் என்பவர் உயிரிழந்தார். இவரின் திட்டங்கள் ஒவ்வொன்றாக தமிழக காவல்துறையும் புலனாய்வு குழுவும் கண்டறிந்து வருகின்றனர். 

    இதையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பாக ஜமேஷா முபீன் உறவினர் மற்றும் நண்பர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். 

    இதுகுறித்த விசாரணை தற்போது தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்த வண்ணமே உள்ளன. 

    இந்த விசாரணையின் அடிப்படையில், முகமது தல்கா வயது 25, முகமது அசாருதீன் வயது 23, முகமது ரியாஸ் வயது 27, பெரோஸ் இஸ்மாயில் வயது 27, முகமது நவாஸ் இஸ்மாயில் வயது 26, அப்சர்கான் வயது 28 ஆகிய 6 நபர்களை கைது செய்து உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

    இந்நிலையில் இவர்கள் ஆறு பேரும் இன்று சென்னை அருகே பூந்தமல்லியில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அங்கு முழு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

    இந்தச் சம்பவத்தில் 6 பேரையும் வருகிற 22 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க என்ஐஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர்களை பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்குமாறும், வருகிற 22 ஆம் தேதி மீண்டும் என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. 

    இந்தச் வெடிகுண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபீன், தனது மொபைலில் ஐஎம்ஓ செயலியை பயன்படுத்தியதும், இதன் மூலம் அவர் குழுவாக இணைந்து செயல்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். 

    இதையும் படிங்க: இடஓதுக்கீடு தீர்ப்பின் எதிரொலி; கூடுகிறதா அனைத்துக்கட்சி கூட்டம்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....