Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு10% இட ஒதுக்கீடு தீர்ப்பு: சட்ட வல்லுனர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை...

    10% இட ஒதுக்கீடு தீர்ப்பு: சட்ட வல்லுனர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை…

    10% இட ஒதுக்கீடு தீர்ப்பு குறித்து சட்ட வல்லுனர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். 

    கடந்த 2019 ஆம் ஆண்டு பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தினை மத்திய அரசு கொண்டுவந்தது. 

    அரசியல் சாசனத்தின் 103-வது திருத்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என பல வல்லுநர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

    மேலும் இந்த அரசியல் சாசன திருத்தத்தின் மூலமாக கொண்டுவரப்பட்ட சட்டத்தை ரத்து செய்யக்கோரி பல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த அனைத்து வழக்குகளையும் ஒரு சேர இணைத்து இதற்கான தீர்ப்பு நேற்று வெளிவந்தது. அதன்படி, 10% இட ஒதுக்கீடு செல்லும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இந்நிலையில்,10% இட ஒதுக்கீடு தீர்ப்பு குறித்து சட்ட வல்லுனர்களுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடித்தினார்.

    இதையும் படிங்க: இடஓதுக்கீடு தீர்ப்பின் எதிரொலி; கூடுகிறதா அனைத்துக்கட்சி கூட்டம்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....