Monday, March 18, 2024
மேலும்
    Homeவாழ்வியல்ஆரோக்கியம்சிறுநீரக கோளாறுக்கு நவீன உணவு முறை தான் காரணமா? ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

    சிறுநீரக கோளாறுக்கு நவீன உணவு முறை தான் காரணமா? ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

    நவீன உலகில் தொழில்நுட்பம் ஒருபுறம் வளர, மறுபுறம் உணவு முறையும் மாறி வருகிறது. இதனால், இளம் வயதிலேயே பல நோய்களுக்கு ஆளாகும் நிலைமை அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில், சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்றில், தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக நவீன உணவு முறையே என மருத்துவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இனி வரும் காலங்களில் பாரம்பரிய உணவு முறைகளை கடைப்பிடித்தால் மட்டுமே நோய்களிலிருந்து தப்பிக்க முடியும் என்பது நிதர்சனமான உண்மை.

    தமிழக பொது சுகாதாரத்துறை, kidney diseaseத்தின் நிதியில் கடந்த பிப்ரவரி மாதத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது. ஆய்வில் சென்னை மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த சிறுநீரகவியல் துறையும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. தமிழகம் முழுவதிலும் 177 இடங்களில் 18 வயதுக்கு மேற்பட்ட 4741 நபர்களிடம், ஆய்வு நடத்தப்பட்டது. மருத்துவ அலுவலர், செவிலியர், சுகாதார ஆய்வாளர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் உள்பட 92 ஆய்வுக் குழுக்கள், பல நிலைகளில் மாதிரிகளை சேகரித்து ஆய்வை மேற்கொண்டனர்.

    ஆய்வு முடிவில், 4741 பேரில் 455 நபர்களுக்கு, இரத்தத்தில் கிரியாட்டினின் அளவு அதிகமாக இருந்துள்ளது. இந்த அளவானது மொத்த எண்ணிக்கையில் 9.5% ஆகும். மேலும், 276 நபர்களுக்கு ஆல்புமின் அளவு அதிகமாக இருந்துள்ளது. இவர்களைத் தவிர 367 நபர்களுக்கு சிறுநீரில் இரத்த சிவப்பணுக்கள் இருந்துள்ளன. இது மொத்த எண்ணிக்கையில் 7.7% ஆகும்.

    முடிவில, ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு இருப்பது உறுதியாகியுள்ளது. சிறுநீரக கோளாறுகள் குறித்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த, இந்த ஆய்வு வலியுறுத்துகிறது என தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் எனத் தொற்றா நோய்கள் மூலமாக சிறுநீரக கோளாறுகள் ஏற்படுவதால் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. தொடக்க நிலையில் நோயைக் கண்டறிதல் மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சை ஆகியவற்றின் மூலமாக சிறுநீரக நோய்களை கட்டுப்படுத்த முடியும் என பொதுசுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

    “‌சிறுநீரகக் கோளாறு ஏன் அதிகமாகிறது என்பதைச் சார்ந்து, முன்னதாகவே ஒரு ஆய்வினை நடத்தி, அதனை இதனுடன் ஒப்பிட்டிருந்தால் ஒரு முடிவுக்கு வந்திருக்கலாம். முதல்முறையாக பொது சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரகக் கோளாறு இருப்பதாகக கூறுவது அதிகப்படியாக உள்ளதாகவே நினைக்கிறேன்” என்றார், சிறுநீரக அறுவையியல் மருத்துவரும், தருமபுரி நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான இரா.செந்தில்.

    “இது, தொடக்க நிலையிலான ஆய்வு முடிவுகள் தான். இது பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வாகும். அடுத்த மூன்று மாதங்களுக்கு, இவர்களுக்கு சில பரிசோதனைகள் எடுக்கப்படும். அதன்பின், இந்த எண்ணிக்கை குறைகிறதா எனப் பார்த்துவிட்டு மேலும் பரிசோதனைகள் அதிகரிப்போம். அது முடிந்த பிறகு தான் இறுதி முடிவை வெளியிடுவோம்” என்றார், தமிழ்நாடு பொது சுகாதாரத்துறையின் இயக்குநர் மருத்துவர் செல்வவிநாயகம்.

    பிளே ஆஃப் செல்லுமா பெங்களூரு?? குஜராத் அணியினை வீழ்த்தி நான்காவது இடம் பிடித்தது..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....