Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்சினிமாவில் இவ்வளவு வன்முறை காட்சிகள் வரும்போது இனி இதை செய்ய வேண்டுமா?

    சினிமாவில் இவ்வளவு வன்முறை காட்சிகள் வரும்போது இனி இதை செய்ய வேண்டுமா?

    சினிமாக்களில் வன்முறை காட்சிகள் வரும்போது, ஆயுதங்கள் குறித்த எச்சரிக்கை வாசகம் இடம் பெற உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    திரைத்துறை படைப்பாளிகள் தங்கள் படங்களில் அதீதமான வன்முறைக் காட்சிகளை மக்கள் ரசித்து கொண்டாடும் மனநிலையை உருவாக்கி வருகிறார்கள். இந்த வன்முறை காட்சிகள் சமூகத்தில் என்ன விதமான தாக்கத்தை தரும் என்பதற்கு அவர்கள் பொறுப்பேற்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    சமீபத்தில் வெளியான சாணிக்காயிதம் திரைப்படத்தில் மயிர் கூச்செரியும் அதீத வன்முறைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இப்படியான படங்களில் சமூக நீதிக் கருத்துகளும், பெண் சமத்துவ சிந்தனைகள் வலியுறுத்தப்பட்டாலும் அதனை ரத்தம் சொட்டச் சொட்டத் தான் சொல்ல வேண்டுமா? என்று சமூக ஆர்வலர்கள், குழந்தைகள் உரிமை பாதுகாவலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்!

    சினிமா என்பது ஒரு சக்திவாய்ந்த மக்கள் தொடர்பு சாதனம். ஒரு குறிப்பிட்ட உடையை கதாநாயகனோ, நாயகியோ உடுத்திவந்தாலே, அந்த விதமான உடையை மக்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கி அணிகிறார்கள். சினிமாவில் பேசப்படும் வசனங்களை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் அடிக்கடி பிரயோகிக்கிறார்கள்.

    நாயகன், நாயகியின் பாவனைகளை அப்படியே பின்பற்றுகிறவர்களும் உண்டு. பல ஆண்டுகளுக்கு முன்பு ஜெயப்பிரகாஷ் என்பவன் ஒன்பது கொலைகளை செய்தான். அவனை கைது செய்தபோது தன்னுடைய வாக்கு மூலத்தில் “இப்படிப்பட்ட கொலையை செய்ய என்னைத் தூண்டியது இயக்குநர் மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் நடித்து வெளியான ‘நூறாவது நாள்’ படம் தான்” என்றான்.

    ‘அலைகள் ஓய்வதில்லை’ படம் வந்த பிறகு பள்ளி, கல்லூரி மாணவர்கள் காதலித்து ஓடிப்போய் திருமணம் செய்வது அதிகரித்ததாக ஒரு குற்றச்சாட்டு பரவலாக எழுந்தது.

    பெண்களை துரத்தித் துரத்தி காதலிக்கும் வாலிபர்கள் இறுதியில் அந்த பெண் தன்னை விரும்பாவிட்டால் அவள் மீது ஆசிட் வீசுவதோ அல்லது நடுரோட்டில் கத்தியால் குத்தி கொலை செய்வதோ அவ்வப்போது நடக்கிறது.

    இதன் பின்னணியில் சினிமாவின் தாக்கம் இருக்கிறது என்ற வலுவான குற்றச்சாட்டு பலராலும் சொல்லப்பட்டது. இதனால் நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார், “சமூகநலன் கருதி சினிமா துறையினர் வன்முறையை கூடுமானவரை குறைத்துக் கொள்ளவேண்டும்” என்று அறிக்கைவிட்டார்.

    சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர் கோபி கிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது :

    வன்முறை, கொலை, கொள்ளை சம்பவங்களில், இளைஞர்கள் ஈடுபடுகின்றனர். சினிமா காட்சிகளை பார்த்து விட்டு, அதை உண்மையில் அரங்கேற்றுகின்றனர். சினிமாவில் நடிகர்கள் பேசுவதை அப்படியே நம்பி, அவர்களின் ரசிகர்கள் பின்பற்றுகின்றனர்.

    சென்னை, டில்லியில், கல்லுாரி மாணவர்கள் ஆயுதங்களால் தாக்கிய சம்பவங்களும் நடந்தன. டில்லியில், புஷ்பா படம் பார்த்த பின், பட்டப்பகலில் கொலை சம்பவத்தை இளைஞர்கள் அரங்கேற்றினர்.எனவே, புகை பிடிப்பது, மது அருந்துவது உடலுக்கு கேடு என எச்சரிக்கை வாசகங்கள் இருப்பது போல, சினிமா படங்களில் வன்முறை காட்சிகளின் போது, ‘இதில் பயன்படுத்தும் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள், காகிதத்தால் செய்யப்பட்டது. ‘கலர் தண்ணீர் ரத்தமாக காட்டப்படுகிறது’ என்ற வாசகங்கள் இடம் பெற வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    பிளே ஆஃப் செல்லுமா பெங்களூரு?? குஜராத் அணியினை வீழ்த்தி நான்காவது இடம் பிடித்தது..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....