Wednesday, May 8, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்முகநூல் பக்கத்தின் தலைமை இயக்க அதிகாரி பதவியிலிருந்து விலகலா?

    முகநூல் பக்கத்தின் தலைமை இயக்க அதிகாரி பதவியிலிருந்து விலகலா?

    ஃபேஸ்புக்கின் சிஇஓ-வான மார்க் சக்கர்பெர்க், தான் 23 வயதாக இருக்கும்போது 2008-ல் ஃபேஸ்புக் விளம்பர மார்க்கெட்டை உயர்த்துவதற்காக கூகுளிலிருந்து ஷெரில் சாண்ட்பெர்க்கை அழைத்து வந்தார். சாண்ட்பெர்க் ஃபேஸ்புக்கின் முக்கியமான நிர்வாகியாக பொறுப்பேற்றப்பின் ஃபேஸ்புக்கின் வருமானம் உச்சிக்குச் செல்ல ஆரம்பித்தது. குறிப்பாக ஃபேஸ்புக்கின் விளம்பர மார்க்கெட் அசுர வளர்ச்சி அடைந்தது. கடந்த 2021-ல் ஃபேஸ்புக்கின் 97 சதவிகித வருமானமான சுமார் 117 பில்லியன் டாலர், விளம்பரங்களின் மூலம் மட்டுமே வந்ததாகக் கூறப்படுகிறது.

    இந்நிலையில் ஃபேஸ்புக் உலகளவில் ஒரு பெரிய நிறுவனமாக கோலோச்ச உதவி செய்து, மார்க் சக்கர்பெர்க் உடன் 14 ஆண்டுகள் பயணித்து வந்த ஷெரில் சாண்ட்பெர்க், ஃபேஸ்புக் மற்றும் அதன் தாய் நிறுவனமான மெட்டாவிலிருந்து தன் பொறுப்புகளைத் துறந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

    மேலும், ஷெரில் கூறுகையில், “கடந்த 14 ஆண்டுகளாக ஃபேஸ்புக்கில் பணிபுரியும் பாக்கியத்தைப் பெற்று மெட்டாவில் உள்ள ஆயிரக்கணக்கான புத்திசாலித்தனமான, அர்ப்பணிப்புள்ள மக்களுக்கு நான் நன்றியுள்ளவராக இருப்பேன். ஒவ்வொரு நாளும் என்னை ஒருவர் வழிநடத்தியதால் நான் ஒரு அதிர்ஷ்டசாலி என்றே கருதுகிறேன்’. பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, எனது வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தை எழுதுவதற்கான நேரம் இது. எதிர்காலம் என்ன கொண்டு வரும் என்று எனக்கு முழுமையாகத் தெரியவில்லை. யாரும் நம்முடன் நிரந்தரமாக இருக்கப்போவதில்லை என்று நான் கற்றுக்கொண்டேன்” என்று கூறியுள்ளார்.

    52 வயதான ஷெரில் சாண்ட்பெர்க், சிலிக்கான் பள்ளத்தாக்கின் மிகவும் சக்திவாய்ந்த பெண்களில் ஒருவராக இருந்து வருகிறார். மேலும் சமூக ஊடக சவால்களையும் எதிர்கால கடுமையான போட்டியையும் அவர் எதிர்கொண்டு நிறுவனத்தை வெற்றிகரமாக வழிநடத்தி கொண்டிருந்த நிலையில் அவரது வெளியேற்றம் மிகப்பெரிய பின்னடைவு என கருதப்படுகிறது.

    ஷெரில் சாண்ட்பெர்க்யின் பதவி விலகல் குறித்து கருத்து தெரிவித்து உள்ள மார்க் சக்கர்பெர்க் “எனக்கு அப்போது 23 வயதுதான். ஒரு நிறுவனத்தை நடத்துவது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஷெரில்தான் எங்கள் விளம்பர வணிகத்தை உருவாக்கினார். சிறந்த நபர்களை பணியமர்த்தினார். எங்கள் மேலாண்மை கலாசாரத்தை உருவாக்கினார். மேலும் ஒரு நிறுவனத்தை எப்படி நடத்துவது என்று எனக்குக் கற்றுக் கொடுத்தார்.

    அவர் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தார். தொழில் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் என் வாழ்க்கையில் பல முக்கியமான தருணங்களில் அவர் என்னுடன் இருந்தார். எதிர்காலத்தில், ஷெரிலுடன் இணைந்து இந்த நிறுவனத்தை நடத்தும் தருணங்களை இழந்தது எண்ணி நான் வருத்தமடைகிறேன்” என்று கூறியுள்ளார்.

    சாண்ட்பெர்க்கின் ராஜினாமா செய்தாலும் அவருடைய பதவி அப்படியே இருக்கும் என்றும், மெட்டாவின் புதிய தலைமை செயல்பாட்டு அதிகாரியாக ஜேவியர் ஒலிவன் பொறுப்பேற்பார் என்று மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளில், நிறுவனத்தின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்துள்ள ஆலிவன், சாண்ட்பெர்க் இடத்தை நிரப்புவார் என்றும் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

    இனி ஹோட்டல்களில் சர்வீஸ் சார்ஜ் கொடுக்காதீங்க… – தகவல்கள் உள்ளே!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....