Monday, March 18, 2024
மேலும்
  Homeசெய்திகள்இந்தியாஇந்தியாவில் மக்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது - டோனி பிளிங்கன்!

  இந்தியாவில் மக்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது – டோனி பிளிங்கன்!

  அமெரிக்க வெளியுறவு அமைச்சர் டோனி பிளிங்கன், சர்வதேச மத சுதந்திரம் குறித்த ஆண்டறிக்கையை வெளியிட்டு பேசியதாவது:

  இந்தியாவில் மக்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகவும், உலகம் முழுவதும் மத சுதந்திரத்திற்காக அமெரிக்கா தொடர்ந்து துணை நிற்கும். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் சீனா போன்ற பிற ஆசிய நாடுகளில் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் பெண்கள் குறிவைக்கப்படுவதாகவும் அவர் கூறினார். நாங்கள் மற்ற அரசாங்கங்கள், பலதரப்பு நிறுவனங்கள், சிவில் சமூகத்துடன் இணைந்து செயல்படுவோம். அடுத்த மாதம் பிரிட்டன் அமைச்சரவை கூட்டத்திலும் இது குறித்து விவாதிக்கப்பட உள்ளது எனவும் தெரிவித்தார்.

  மேலும், அனைத்து மக்களும் அவரவர் மத வழிபாடுகளை சுதந்திரமாக கடைபிடிக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் விருப்பம். உதாரணமாக, உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் மற்றும் பல்வேறு நம்பிக்கைகளின் தாயகமான இந்தியாவில், மக்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்து வருவதை நாங்கள் காண்கிறோம்; வியட்நாமில், பதிவு செய்யப்படாத மத சமூகங்களின் உறுப்பினர்களை அதிகாரிகள் துன்புறுத்துகிறார்கள்; நைஜீரியாவில், பல மாநில அரசாங்கங்கள் அவதூறு எதிர்ப்பு மற்றும் தெய்வ நிந்தனை சட்டங்களைப் பயன்படுத்தி மக்கள் தங்கள் நம்பிக்கைகளை வெளிப்படுத்தியதற்காக தண்டிக்கின்றனர்.”

  நைஜீரியாவில் உள்ள பல மாகாண அரசுகள், தங்கள் மத நம்பிக்கையை வெளிப்படுத்துவோர் மீது அவதுாறு வழக்கு தொடுக்கின்றன. பௌத்த, கிறிஸ்தவ, இஸ்லாமிய மற்றும் தாவோ வழிபாட்டு இல்லங்களை அழிப்பதன் மூலமும், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் வேலை வாய்ப்பு மற்றும் வீடுகளுக்கு தடைகளை அமைப்பதன் மூலமும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்பாட்டிற்கு புறம்பாக கருதும் பிற மதங்களை பின்பற்றுபவர்களை சீனா தொடர்ந்து துன்புறுத்துகிறது.

  ஆப்கானிஸ்தானில், தலிபான்களின் கீழ் மத சுதந்திரத்திற்கான நிலைமைகள் வியத்தகு முறையில் மோசமடைந்துள்ளன, குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகளின் கல்வி, வேலை, சமூகத்தில் ஈடுபடுவதற்கான அடிப்படை உரிமைகளை அவர்கள் பறிக்கிறார்கள். பாகிஸ்தானில் மத நிந்தனை குற்றத்தின் பேரில், கடந்த ஆண்டு, 16 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் சிறுபான்மையினர் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

  இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள நமது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது: ‘சர்வதேச உறவுகளில் வாக்கு வங்கி அரசியல் கடைபிடிக்கப்படுவது துரதிர்ஷ்டவசமானது’ என்று பதிலளித்துள்ளது. மேலும், அமெரிக்காவில் தான், இன மற்றும் இன ரீதியாக தூண்டப்பட்ட தாக்குதல்கள், குற்றங்கள் மற்றும் துப்பாக்கி வன்முறை பெருகி உள்ளதாக பதிலடி தந்துள்ளது.

  இனி ஹோட்டல்களில் சர்வீஸ் சார்ஜ் கொடுக்காதீங்க… – தகவல்கள் உள்ளே!

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....