Monday, March 18, 2024
மேலும்
  Homeசெய்திகள்அரசியல்உயிரை விடும் சூழல் வந்தால், அதற்கும் நான் தயார் - மு.க.ஸ்டாலின் பேச்சு!

  உயிரை விடும் சூழல் வந்தால், அதற்கும் நான் தயார் – மு.க.ஸ்டாலின் பேச்சு!

  சென்னை வேளச்சேரியில் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பில் முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் 99வது பிறந்தநாளை முன்னிட்டு பேச்சு போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் – அமைச்சர் முக ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்.

  இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், செஞ்சி மஸ்தான், பொன்முடி மற்றும் கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

  இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்  அமைச்சர் முக ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்.

  அதன் பிறகு பேசிய மு.க. ஸ்டாலின் கூறியதாவது;

  திமுக ஆட்சி அமைந்ததும் தமிழகம் தலைநிமிர தொடங்கி விட்டது. பேச்சு, கவிதைக்கு தற்போது மரியாதை உயர்ந்துள்ளது; இந்தப் போட்டிகளை பார்த்தபோது, எனது கல்லூரி கால நினைவுக்கு சென்று விட்டேன். மாநில சிறுபான்மை ஆணையம் சார்பாக கலைஞர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு பேச்சு போட்டி வைத்து அவர்களுக்கு பரிசளிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தலை நிமிரும் தமிழகம் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி நடத்தியதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன், நீங்கள் வெற்றி பாதையில் தொடர்ந்து செல்ல வேண்டும்.

  பேச்சு என்பது ஒரு கலை. அது எல்லோருக்கும் வாய்க்காது. எல்லாவற்றிலும் வென்றவர்கள் கூட மேடைகளில் தோற்றுவிடுவார்கள். மேடைகளை ஆட்சி செய்வது என்பதும், கோட்டையை ஆட்சி செய்வதைப் போல அவ்வளவு கடினமானது எனக் கூறினார்.

  திராவிட மாடல் ஆட்சியானது இன்று தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. திராவிட மாடல் என்பது எதையும் இடிக்காது, உருவாக்கும். திராவிட மாடல் என்பதை எதையும் சிதைக்காது! சீர் செய்யும் திராவிட மாடல் என்பது யாரையும் பிரிக்காது! அனைவரையும் ஒன்று சேர்க்கும் திராவிட மாடல் என்பது யாரையும் தாழ்த்தாது.

  இந்த திராவிட மாடல் ஆட்சி இன்றைக்கு நடைபெற்று வருகிறது. இந்த தத்துவத்தை பயிற்றுவிக்கும் பாசறையாகவே மாநிலச் சிறுபான்மையினர் ஆணையம் திகழ்வதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.அனைத்துத் துறைகளும் இது போன்று மாணவச் செல்வங்களுக்கு பேச்சுப் பயிற்சி தருமானால் தமிழ்நாட்டுக்கு ஏராளமான பேச்சாளர்கள் கிடைப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

  திராவிட ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து தமிழகம் தலைநிமிரத் தொடங்கிவிட்டது, இதனை மக்கள் பார்த்து வருகிறார்கள். இன்றைய காலகட்டத்துக்கு இது மிகவும் அவசியமானது. 1971 ம் ஆண்டு தமிழகத்தில் இந்தி திணிப்பு முயற்சி செயல்பட்டுக் கொண்டிருந்த போது  கோவையில் மாநாடு நடைபெற்றது. நான் அந்த மாநாட்டில் இரண்டு நிமிடம் மேடையில் பேச வேண்டும் என்று அனுமதி கேட்டேன். அப்போதைய என்னுடைய வயது 17.

  பேச்சுப் போட்டிகளில் பங்கேற்றுள்ள மாணவர்கள் பார்க்கும் பொழுது, ரத்தம் சூடான உணர்ச்சி கொப்பளிக்க எழுச்சியுடன் இருந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டில் நடைபெற்ற இதுபோன்ற பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் பெரும்பாலும் அரசியல் ஆர்வம் கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள். இவர்களை பார்க்கும் பொழுது எனக்கு அமைச்சர் துரைமுருகன் நினைவில் வருகிறார், அவர் பேச்சாற்றல் மிகவும் சிறந்தவர்.

  மொழிக்காக இனத்துக்காக உயிரை விடும் சூழல் வந்தாலும் அந்த தியாகத்தை செய்ய நான் தயார்” எனக் கூறினார். மேலும், இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தியிருக்கக்கூடிய சிறுபான்மை ஆணையத்திற்கு என்னுடைய நன்றியை வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு, என் உரையை நிறைவு செய்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  வரலாற்றில் நடந்த அழகான சம்பவம்; எஜமானரின் உயிரை இரண்டு முறை காத்த நாய்!!

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....