Monday, March 18, 2024
மேலும்
    Homeஆன்மிகம்எந்தெந்த தினங்களில் எந்தெந்த தெய்வத்தை வழிபட்டால் அதிகமான நன்மைகள் கிடைக்கும்! - தகவல்கள் உள்ளே !

    எந்தெந்த தினங்களில் எந்தெந்த தெய்வத்தை வழிபட்டால் அதிகமான நன்மைகள் கிடைக்கும்! – தகவல்கள் உள்ளே !

    பொதுவாக சிலர் அவர்களுக்கு பிடித்த தெய்வத்தை எல்லா கிழமைகளிலும் வழிபடுவது உண்டு. ஆனால் அந்த தெய்வத்திற்கு உரிய சிறப்பு நாளன்று வழிபட்டால் இன்னும் அதிகமான நன்மைகள் கிடைக்கும். வாருங்கள் தெரிந்துக் கொள்ளலாம், எந்தெந்த நாளில் எந்தெந்த தெய்வத்தை வணங்க வேண்டும் என்று. 

    திங்கட்கிழமை: 

    திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. சிவனை மனதார நினைத்து விரதம் இருந்து வழிபட்டால் நல்ல நன்மைகளைப் பெறலாம். வில்வ மாலை அணிவித்து, 108 ருத்ர ராட்ச மணிகளைக் கொண்டு ஓம் நமச்சிவாய மந்திரத்தை சொல்லி வழிபாடு செய்தால் நினைத்தது நடக்கும். 

    செவ்வாய்க்கிழமை: 

    செய்வாய்க்கிழமை, துர்கை அம்மனை வழிபாடு செய்வதால் வாழ்க்கையில் குழப்பங்கள் விலகி தெளிவு பிறக்கும். அனுமன் வழிபாடு செய்யவும் இந்நாள் உகந்த நாளாகும். இந்த நாட்களில் விரதம் இருந்து வழிபாடு செய்து வந்தால் நல்வழி பிறக்கும். 

    புதன் கிழமை: 

    புதன்கிழமைகளில் விநாயக வழிபாடு முக்கியத்துவம் பெற்றது. புதன் கிழமையில் மட்டுமல்ல எல்லா தினத்திற்கும் தெய்வத்திற்கும் முதன்மையான கடவுள் விநாயக பெருமான் ஆவார். அதனால் எந்த ஒரு செயலை தொடங்க வேண்டும் என்றாலும், விநாயக பெருமானை வழிபட்டு செய்தால் நல்லதாகவே முடியும். 

    வியாழக்கிழமை: 

    வியாழக்கிழமைகளில் பொதுவாக விஷ்ணு வழிபாடு செய்வது வழக்கமாகும். மேலும், இந்நாள் தட்சிணாமூர்த்திக்கு மிகவும் உகந்த நாள் ஆகும். இந்நாள்களில் தட்சிணாமூர்த்திக்கு விளக்கேற்றி வழிபாடு செய்வது நல்ல பயன்களைத் தரும். இப்படி செய்வதால் குரு ஆனவர் அறிவு, ஞானம், தெளிவு போன்றவற்றை தருவார். மேலும்,  இந்நாள்களில் சாய் பாபா வழிபாடும் செய்யலாம்.

    வெள்ளிக்கிழமை: 

    வெள்ளிக்கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்வது மிகவும் நன்மையைத் தரும். அனைத்து விதமான அம்மன் அவதாரங்களையும் வழிபாடு செய்யலாம். குறிப்பாக வெள்ளி கிழமை வீட்டில் விளக்கேற்றி அம்மனை நினைத்து, ஏதேனும் இனிப்பு செய்து படைத்து வழிபாடு செய்யலாம்.    

    சனிக்கிழமை: 

    சனிக்கிழமைகளில் சனி பகவான் வழிபாடு செய்வது உகந்ததாகும். மேலும் சனிக்கிழமைகளில் பெருமாள் வழிபாடு செய்வது இன்னும் நல்ல பலன்களைத் தரும். பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி வழிபட்டால் நினைத்த காரியங்கள் நடைபெறும். 

    ஞாயிற்றுக்கிழமை:

    ஞாயிற்றுக்கிழமைகளில் நவகிரக வழிபாடு செய்யலாம். குறிப்பாக சூரிய பகவானை வழிபாடு செய்வது நல்ல உடல் ஆரோக்கியத்தையும் மன தைரியத்தையும் கொடுக்கும்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....