Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுகுழப்பத்தில் உள்ள பஞ்சாப் கிங்ஸ், தோல்வியை சந்திக்காத குஜராத் அணியை தோற்கடிக்குமா ?

    குழப்பத்தில் உள்ள பஞ்சாப் கிங்ஸ், தோல்வியை சந்திக்காத குஜராத் அணியை தோற்கடிக்குமா ?

    நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், இன்று நடைபெறவிருக்கும் 16-ஆவது போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதவிருக்கின்றன. 

    குஜராத் டைட்டன்ஸ் 

    இதுவரை விளையாடிய இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தாலும், கடந்த முறை டெல்லிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் விளையாடிய விதம் அந்த அணிக்கு கூடுதல் நம்பிக்கையைத் தந்திருக்கிறது. 

    குறிப்பாக சுப்மன் கில், கடந்த ஆட்டத்தில் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விதம் மிகவும் பாராட்டுக்குரியதாக பேசப்பட்டது. மேலும், குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும், இந்த மாதிரியான சுப்மன் கில்லைத்தான் நாங்கள் எதிர்ப்பார்த்தோம் என்றார். 

    இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வேகப்பந்து வீச்சுதான் குஜராத் அணிக்கான பெரிய காரணமாய் பார்க்கப்பட்டது. ஆனால் இன்றைய போட்டியில் வேகப்பந்து வீச்சு சறுக்க அதிகம் வாய்ப்புள்ளதால், குஜராத் அணி இன்று தடுமாற வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது. 

    அதேசமயம், ரஷித்கான் இதுவரை பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடிய 10 போட்டிகளில் 18 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குஜராத் அணிக்கு நம்பிக்கைத் தருவதாக இருக்கிறது. 

    குஜராத் டைட்டன்ஸ் அணியானது நான்கு நாட்களுக்குப் பிறகு விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்காத ஒரே அணி, குஜராத் டைட்டன்ஸ்தான்.

    பஞ்சாப் கிங்ஸ் 

    பஞ்சாப் அணியை பொறுத்தவரையில் தற்போது பெரிய குழப்பத்தில் இருப்பதாகவே தெரிகிறது. எதிர்பாரா விதமாக களத்தில் இறக்கப்பட்ட இலங்கை வீரர் ராஜபக்சே தனது திறமையை நிரூபித்துள்ளதால்தான் பஞ்சாப் அணிக்கு குழப்பமே. 

    ஆம்! பேர்ஸ்டோவுக்கு பதிலாக களமிறக்கப்பட்டவர்தான் ராஜபக்சே. ஆனால் இப்போது பேர்ஸ்டோ மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளதால் யாரை விளையாட வைப்பதென்றும், யாரை அமர வைப்பதென்றும் தெரியாத சூழல் நிலவுகிறது. 

    மேலும், பஞ்சாப் அணியானது பவர்பிளேவில் நன்கு விளையாடி வருகிறது. இது பஞ்சாப் அணிக்கு பெரிய பலமாகவே பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் ராஜபக்சே என்பது குறிப்பிடத்தக்கது. 

    இரு அணிகளும் மோதிக்கொள்ளும் இன்றையப் போட்டியானது, இன்று இரவு 7:30 மணியளவில் மும்பையில் உள்ள பிரபார்ன் மைதானத்தில் நடைபெறுகிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....