Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமாநகராட்சி நிதிநிலை அறிக்கை: பள்ளி மாணவர்களுக்கு மாலையில் 'சிறு தீனி'

    மாநகராட்சி நிதிநிலை அறிக்கை: பள்ளி மாணவர்களுக்கு மாலையில் ‘சிறு தீனி’

    சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் பள்ளி மாணவர்களுக்கு மாலையில் ‘சிறு தீனி’ வழங்க உள்ளதாக மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    சென்னை மாநகராட்சிக்கான நிதிநிலை அறிக்கை கடைசியாக கடந்த 2016 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததன் காரணமாக நேரடி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. 

    இதைத்தொடர்ந்து, மாநகராட்சி தேர்தல் நடத்தப்பட்டு, சென்னை மேயராக பிரியா தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் இவர், 2022-2023 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை கடந்த ஏப்ரல் மாதம் தாக்கல் செய்தார். 

    கடந்த நிதிநிலை அறிக்கையில் காலை சிற்றுண்டி திட்டத்தை விரிவுப்படுத்துதல், பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட 67 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இவற்றில், பெரும்பாலான பணிகள் செய்து முடிக்கப்பட்டுவிட்டன. இதில் ஒரு சில பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

    இந்நிலையில், 2023-2024 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. சென்னை ரிப்பன் மாளிகை கட்டிடத்தில் நடைபெற்ற கூட்ட அரங்கில் நிதிநிலை அறிக்கை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடியது. இந்தக் கூட்டத்தில் மேயர் பிரியா நிதிநிலை அறிவிப்புகளை வெளியிட்டார். 

    இதில், சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு மாலையில் ‘சிறு தீனி’ எனப்படும் ஸ்நாக்ஸ் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இந்த திட்டத்திற்கு ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 

    மேலும் சில முக்கிய நிதிநிலை அறிவிப்புகள்:

    • பராமரிப்பு பணிகளுக்காக 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
    • சென்னையில் உள்ள 10 பள்ளிகளில் ஆய்வகம் மேம்படுத்துவதற்காக 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
    • சென்னை மாநகராட்சியில் உள்ள பள்ளிகளில் தினமும் 10 நிமிடங்கள் மகிழ்ச்சியான வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மும்பைக்கு சொந்தமான முதல் கோப்பை..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....