Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்தொடரும் காலிஸ்தான் போராட்டம்.. இந்திய தூதரகங்களில் ஆர்ப்பாட்டம்

    தொடரும் காலிஸ்தான் போராட்டம்.. இந்திய தூதரகங்களில் ஆர்ப்பாட்டம்

    வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். 

    இந்தியாவின் பஞ்சாப் மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப்பை பிரித்து இரு பகுதியையும் இணைத்து காலிஸ்தான் என்ற தனிநாட்டை உருவாக்க வேண்டுமென்று நெடுங்காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த காலிஸ்தான் அமைப்பு இந்தியாவில் ஒடுக்கப்பட்ட ஒன்றாகும். 

    இருப்பினும், ஆஸ்திரேலியா, கனடா போன்ற அயல்நாடுகளில் காலிஸ்தான் அமைப்பினர் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் கடந்த சில மாதங்களாக இந்து கோயில்களை சேதப்படுத்தி வருகின்றனர். 

    இச்சூழலில், பஞ்சாபில் காலிஸ்தான் ஆதரவாளரான தலைவர் அம்ரித்பால் சிங் ‘வாரிஸ் பஞ்சாப் டி’ எனும் குழுவை அமைத்து வன்முறையில் ஈடுபட்டார். இதையடுத்து, இவரை போலீஸார் கடந்த ஒரு வாரமாக தேடிவருகின்றனர். 

    இதற்கு வெளிநாடுகளில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்திய தூரகங்களின் முன் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த வாரம் லண்டனில் உள்ள இந்திய தூரதகத்துக்குள் புகுந்து காலிஸ்தான் ஆதரவளர்கள் தேசியக் கொடியை அகற்றினர். கனடாவில் காந்தி சிலையையும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்தினர்.

    அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோ நகரில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் கடந்த வாரம் ஞாயிற்றுகிழமை தாக்குதல் நடத்தினர்.

    இந்நிலையில் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். இந்திய தூதர் தரண்ஜித் சிங் சாந்துவிற்கு வெளிப்படையாகவே அவர்கள் மிரட்டல் விடுத்தனர்.

    மேலும், தூதரகத்தின் தேசிய கொடிக்கம்பத்தை போராட்டக்காரர்கள் நெருங்க முயன்றனர். இதையடுத்து, ஆனால் போலீஸார் போராட்டகாரர்களை அப்புறப்படுத்தினர். 

    பொன்னியின் செல்வன்; வெளிவந்த முக்கிய அறிவிப்பு..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....