Friday, March 22, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்இணையத்தில் கசிந்த கேப்டன் மில்லர் வீடியோ...

    இணையத்தில் கசிந்த கேப்டன் மில்லர் வீடியோ…

    கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் சமூகவலைதளத்தில் லீக் ஆகியுள்ளதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. 

    தனுஷ் நடிப்பில் முன்னதாக வெளிவந்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதேசமயம் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த ‘நானே வருவேன்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 

    இதைத்தொடர்ந்து, நடிகர் தனுஷ், ராக்கி, சாணிக்காயிதம் என வெற்றித்திரைப்படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். 1930-களின் பின்னணியில் நடக்கும் கதையாக கேப்டன் மில்லர் உருவாக உள்ளது. 

    கேப்டன் மில்லர் திரைப்படத்தின் முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் நடிக்கிறார். மேலும், இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகனும், சில்லுக்கருப்பட்டி திரைப்பட புகழ் நிவேதிதா சதிஷூம் நடித்து வருகின்றனர். 

    இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தென்காசி அருகே நடைபெற்று வருகிறது. அங்கு காட்டுப் பகுதியில் போர்க் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், படப்பிடிப்பு காட்சிகளை வீடியோ எடுத்த ஒருவர், அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்தது. மேலும், அந்த காட்சிகளை நீக்கும் பணியில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

    மும்பைக்கு சொந்தமான முதல் கோப்பை..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....