Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்கிடைக்கின்ற வழிகளில் விரைவில் வெளியேறுங்கள்: இந்திய தூதரகம் விடுத்த எச்சரிக்கை பதிவு

    கிடைக்கின்ற வழிகளில் விரைவில் வெளியேறுங்கள்: இந்திய தூதரகம் விடுத்த எச்சரிக்கை பதிவு

    உக்ரைனில் நாளுக்குநாள் போர் தீவிரமடைந்து வருவதால் ,கிடைக்கின்ற வழிகளில் இருந்து அந்நாட்டை விட்டு இந்தியர்கள் விரைவில் வெளியேறி வருமாறு ,இந்திய தூதரகம் அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது .

    இது அக்டோபர் 11 க்குப் பிறகு இந்தியத் தூதரக தரப்பில் இருந்து வெளிவந்துள்ள இரண்டாவது அறிவிப்பாகும் .

    உக்ரைன் – ரஷ்யா இடையே இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி தொடங்கிய போர் ,கடந்த எட்டு மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த போரின் தாக்கம் சில நாட்களாக குறைந்து ,அமைதி ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

    போர் தொடங்கியதில் இருந்து ,இதுவரை இல்லாத அளவிற்கு உக்ரைன் தலைநகர் கீவ்வில் ,ரஷ்யா மீண்டும் பயங்கரமான ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. உக்ரைனில் இருக்கும் முக்கிய நகரங்களில் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மூலம் ரஷ்யா தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

    கீவ்,கிரீமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் பாலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்ட குண்டு வெடிப்புக்கு உக்ரைன்தான் காரணமாக இருக்கும் என்று ரஷ்யா வைத்த குற்றசாட்டுகளை தொடர்ந்து நடத்தப்படும் இந்த போரால் மக்கள் மீண்டும் அச்சம் அடைந்துள்ளனர்.

    மேலும் அந்த பகுதியில் தாக்குதல் தீவிரமடையலாம் என்ற அச்சத்தில் மக்கள் சிலர் படகுகள் மூலம் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

    இந்நிலையில், போர் தீவிரமடைந்து வருவதை கருத்தில் கொண்டு இந்திய தூதரகம் , உக்கரைனில் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேற வலியுறுத்தி புதிய அறிவுறுத்தல் மற்றும் அவசர எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

    இதையும் படிங்க:ஜெய்பீம், கேஜிஎப் 2-வை பின்னுக்கு தள்ளி ஐ.எம்.டி.பியை தெறிக்க விட்ட ‘காந்தாரா’ ! ரசிகர்கள் கொண்டாட்டம்

    அந்த அறிக்கையில் இந்திய தூதரகம் கூறியிருப்பதாவது :

    உக்ரைனில் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதையும், உக்ரைன் முழுவதும் சண்டைகள் அதிகரித்து வருவதையும் கருத்தில் கொண்டு, இந்தியர்கள் யாரும் புதிதாக பயணம் மேற்கொள்ள வேண்டாம்.

    அதேபோல் அங்கு வசித்து வரும் மாணவர்கள் மற்றும் இந்தியர்கள், கிடைக்கக்கூடிய வழிகளில் விரைவில் உக்ரைனை விட்டு பாதுகாப்பாக வெளியேற வேண்டும்.

    இவ்வாறு உக்ரைனில் இருக்கும் இந்தியத் தூதரகம் நேற்று (19.10.2022) தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....