Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஇனி ஆன்லைனில் ரம்மி விளையாடினா 'சிறை' தான்! சூதாட்ட பிரியர்களுக்கு 'செக்' வைத்த தமிழக அரசு

    இனி ஆன்லைனில் ரம்மி விளையாடினா ‘சிறை’ தான்! சூதாட்ட பிரியர்களுக்கு ‘செக்’ வைத்த தமிழக அரசு

    ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு சட்டமன்றத்தில் குரல் வாக்கெடுப்பு எடுக்கப்பட்ட நிலையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்த மசோத ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. 

    தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய சட்டம்  இயற்றப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில்  தெரிவித்திருந்தார். 

    இதுதொடர்பாக, ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய ஏதுவாக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில், தமிழக அரசு குழு அமைத்தது. 

    இந்நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு, கடந்த ஜூன் 27 ஆம் தேதி அறிக்கையை முதல்வரிடம் ஒப்படைத்தது. 

    இதைத்தொடர்ந்து, நேற்று (அக்டோபர் 19) ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு சட்டமன்றத்தில் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதையயடுத்து, சட்டத்துத்துறை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

    சட்டமன்றத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: ஜெய்பீம், கேஜிஎப் 2-வை பின்னுக்கு தள்ளி ஐ.எம்.டி.பியை தெறிக்க விட்ட ‘காந்தாரா’ ! ரசிகர்கள் கொண்டாட்டம்

    விதிக்கப்படும் தண்டனைகளும் அபராதங்களும் 

    • தடை போடப்பட்ட ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபடுவோருக்கு 3 மாத கால சிறை அல்லது 5000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும். 
    • சூதாட்ட விளம்பரங்களை வெளியிடுபவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது ஓராண்டு சிறை அல்லது இரண்டுமே தண்டனையாக வழங்கப்படும். 
    • சூதாட்டத்தை நடத்தும் நிறுவனம் அல்லது நபர்களுக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது 3 ஆண்டுகள் சிறை அல்லது இரண்டுமே தண்டனையாக வழங்கப்படும். 
    • இரண்டுமுறை தவறிழைக்கும் நபர்கள்/நிறுவனங்களுக்கு முந்தைய தண்டனையைவிட இரட்டிப்பாக தண்டனை விதிக்கப்படும். 

    ஆணையத்தால் விதிக்கப்படும் தண்டனைகளில் நீதிமன்றம் தலையிட முடியாத வகையிலும் புதிய சட்டம் வழிவகை செய்கிறது குறிப்பிடத்தக்கது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....