Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்இஸ்லாமிய மசூதியில் ஏற்பட்ட தீ விபத்து; நொறுங்கி விழுந்த ராட்சத குவிமாடம்

    இஸ்லாமிய மசூதியில் ஏற்பட்ட தீ விபத்து; நொறுங்கி விழுந்த ராட்சத குவிமாடம்

    இந்தோனேசியாவில் ஜகார்த்தா இஸ்லாமிய மையத்தின் பெரிய மசூதியில் தீப்பற்றி எரிந்ததால் ராட்சத குவிமாடம் நொறுங்கி விழும் காட்சிகள் வெளியாகி உள்ளன. 

    ஜகார்த்தா இஸ்லாமிய மையத்தில் தற்போது மசூதியை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 3 மணியளவில் அங்கு தீப்பிடிப்பு ஏற்பட்டது. இந்தத் தீ விபத்தில் மசூதியின் ராட்சத குவிமாடம் இடிந்து நொறுங்கிப்போனது. 

    இதையடுத்து, தகவல் அளிக்கப்பட்ட நிலையில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்தத் தீ விபத்தில் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. 

    இந்தத் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    இதையும் படிங்க: கிடைக்கின்ற வழிகளில் விரைவில் வெளியேறுங்கள்: இந்திய தூதரகம் விடுத்த எச்சரிக்கை பதிவு

    இதனிடையே, குவிமாடம் நொறுங்கியதற்கு முன்பு கட்டத்திலிருந்து தீப்பிழம்புகள் மற்றும் புகை வருவது குறித்த காணொளி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....