Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார் எலான் மஸ்க்; எத்தனை பில்லியன் தெரியுமா?

    ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார் எலான் மஸ்க்; எத்தனை பில்லியன் தெரியுமா?

    சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியுள்ளார். ட்விட்டர் நிறுவனத்திற்கு எதிராக எலான் மஸ்க், சமீப காலமாக தனது கருத்துக்களை தெரிவித்து வந்தார். ட்விட்டர் பயனாளர்களின் கருத்து சுதந்திரத்தை பற்றி எலான் மஸ்க் கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் ட்விட்டர் எடிட் பட்டன் குறித்தும் அவர் பேசியிருந்தார். 

    இந்நிலையில், ட்விட்டரின் ஒரு பங்கை 54.20 என்ற அமெரிக்க டாலருக்கு எலான் மஸ்க் வாங்கியுள்ளார். இது இந்திய மதிப்பில், 4120 ரூபாய் ஆகும். மேலும் ட்விட்டரின் 9.2 சவிகித பங்குளை முன்னரே, அவர் வாங்கியுள்ளார். இதன் பேரில் அவர், ட்விட்டர் நிறுவனத்தின் போர்ட் உறுப்பினர்களுள் ஒருவாராக இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 100 பங்குகளையும் முழுமையாக வாங்க நினைத்த இவர், 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து 100 பங்குகளையும் வாங்கி, ட்விட்டரின் உரிமையாளராகவே எலான் மஸ்க் மாறியுள்ளார். இதற்கு இந்திய மதிப்பில் அவர் செலவிட்ட ரூபாயானது 3 லட்சத்து 30 கோடி ஆகும். 

    ட்விட்டரின் மதிப்பு சுமார் 37 பில்லியன் ஆகும். அப்படியிருக்க எலான் மஸ்க் 44 பில்லியன் கொடுப்பதற்கான காரணம் ஒன்று உள்ளது. ட்விட்டர் போர்ட் நிறுவனத்தின் உறுப்பினர்கள், முதலில் எலான் மஸ்க் ட்விட்டர் வாங்குவதை தடுக்க நினைத்தனர்.

    மேலும் அதனால், அவருக்கான பங்கு விலைகளை மட்டும் அதிகரித்து மற்ற பங்கு தாரர்களின் விலைகளை குறைத்துக் கொடுத்தனர். இதனை அறிந்த எலான் மஸ்க் நேரடிப் பணமாக அதாவது ரொக்கமாக, 44 பில்லியன் அமெரிக்க டாலர்களை கொடுக்க தயாராக இருப்பதாக கூறினார். இதன் பேரில் மீண்டும், ட்விட்டர் போர்ட் உறுப்பினர்கள் இவருடன் பேசியுள்ளனர். வெகு நேரமாக நடைபெற்ற சந்திப்பில், ஒரு முடிவாக ட்விட்டர் நிறுவனம் இதற்கு ஒப்புக் கொண்டுள்ளது. இதனை, பாய்சன் பில் எனும் பெயரில் பங்கு வர்த்தகத்தில் குறிப்பிடுவார்கள். 

    அதனால், உலக பணக்காரரும் ஸ்பெஸ்எக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ-வுமான எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தின் புதிய உரிமையாளர் ஆனார்.

    கடந்த 2017 ஆண்டு அவர் “ஐ லவ் ட்விட்டர்” என்று குறிப்பிட்டதற்கு, டேவ் ஸ்மித் “அப்படியென்றால் அதை வாங்குங்கள்” என்று பதில் அளித்திருந்தார். அதற்கு எலான் மஸ்க் “ட்விட்டரின் விலை என்ன”என்று கேட்டிருந்தார். “அப்போ புரியல, இப்போ புரியுது” என்ற சிம்புவின் மீம் டெம்ப்ளட் தான் இப்போது நினைவுக்கு வருகிறது. 

     

    இப்போது, இந்த பதிவின் படமும் நெட்டிசன்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....