Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்சட்டப்பேரவையில் தரக்குறைவாக பேசிய அமைச்சர்; கண்டுக்கொள்ளாத மு.க.ஸ்டாலின்; வெளிநடப்பு செய்த அதிமுக!

    சட்டப்பேரவையில் தரக்குறைவாக பேசிய அமைச்சர்; கண்டுக்கொள்ளாத மு.க.ஸ்டாலின்; வெளிநடப்பு செய்த அதிமுக!

    பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் பொறுப்பில் இருப்பதால், அவரைச் சேர்ந்த குழு தான் துணைவேந்தர்களை நியமிக்கிறது. இதனை எதிர்த்து, துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்க வேண்டும் என்ற சட்ட மசோதாவை திமுக அரசு நேற்று சட்டசபையில் தாக்கல் செய்தது.
    இந்த மசோதாவிற்கு சில கட்சிகள் ஆதரவு அளிக்க, பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். இந்த மசோதாவை தொடக்கத்தில் இருந்தே அதிமுக எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப் பெருந்தகையும், மறைந்த முன்னாள் முதல்வர் பெயரைக் கூறி, அதிமுகவினரை மேலும் கோபமடையச் செய்தார்.
    சட்ட மசோதா மீதான விவாதத்தின் போது, பாப்பிரெட்டிப்பட்டி உறுப்பினா் ஆ.கோவிந்தசாமி சட்டசபையில் பேச முற்பட்டபோது, அமைச்சர் பெரியகருப்பன் ‘உட்காருடா’ என்று சிறிதும் மரியாதை இல்லாமல் அநாகரிகமாக பேசினார். இதனைக் கண்டித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்ய முற்பட்டனர்.
    பிறகு, முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், அவைக் குறிப்பில் அமைச்சா் பேசிய கருத்துகள் எதுவும்  இடம்பெறாது. வெளிநடப்பு செய்ய வாய்ப்பு என்ன இருக்கிறது என்பதைத் தேடிக் கொண்டிருக்கிறீா்கள். ஆகையால், இதுகுறித்து பேரவைத் தலைவா் தான் முடிவெடுக்க வேண்டும். காங்கிரஸ் உறுப்பினா்கள் பேசவும் வாய்ப்புத் தர வேண்டும். அமைதியான முறையில் பேரவையை நடத்தித் தந்திட வேண்டும், என்றாா்.
    அனைவருக்கும் மரியாதை அளிக்க வேண்டும் என்பது தான் மரபு. அமைச்சா் மரியாதை குறைவான அநாகரிகமான வாா்த்தையை பேசுவது சபை மரபுக்கு உரியதா? அவைக் குறிப்பில் இது இடம் பெறா விட்டாலும் அவா் பேசியது சரியாகுமா? அமைச்சரின் அநாகரிகமாக செயலைக் கண்டித்தும், அவையில் இருந்த முதல்வர் அவரைக் கட்டுப்படுத்த தவறியதாலும், நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்று சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
    இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஆளுநருக்கு என தனிப்பட்ட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த அதிகாரத்திற்கு உட்பட்டு தான் ஆளுநர் செயல்பட வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு மாறாக ஆளுநரால் எப்போதும் செயல்பட முடியாது என்று ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறினார்.
    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....