Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்மதுபானத்தின் மீதான வரியை குறைத்த துபாய்... சுற்றுலா பயணிகளை கவர திட்டமா?

    மதுபானத்தின் மீதான வரியை குறைத்த துபாய்… சுற்றுலா பயணிகளை கவர திட்டமா?

    துபாயில் மதுபானங்களின் மீது 30 சதவிகிதம் வரி குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    துபாய் – ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் முக்கியமான ஒன்றாகும். இந்நாட்டுக்கு எண்ணெய் மற்றும் சுற்றுலா போன்றவை அடிப்படை பொருளாதராமாக விளங்குகின்றன. இதனால், இந்த இரு காரணிகளிலும் துபாய் அதிகளவு கவனம் செலுத்தி வருகிறது. 

    சமீப காலமாகவே சுற்றுலா பயணிகளுக்கு அதிகளவில் முக்கியத்துவத்தையும், அவர்களை கவரும் வகையில்  பலவித செயல்களிலும் துபாய் அரசு ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில், தற்போது துபாயில் மதுபானங்களின் மீது 30 சதவிகிதம் வரி குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை துபாயை சேர்ந்த விநியோகஸ்தர்கள் அறிவித்துள்ளனர்.

    மேலும், துபாயில் உள்ள எந்தவொரு சில்லறை விற்பனை மதுபானக் கடையிலும், மது வாங்குவதற்கான சிறப்பு அட்டை அவசியமில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. துபாய் சட்டத்தின்படி, இஸ்லாம் வகுப்பைச் சேராதவர்கள் சில்லறை விற்பனைக் கடைகளில் மது அருந்த 21 வயதை பூர்த்தி செய்தவராக இருக்க வேண்டும். 

    அதபோல, மதுபானம் வாங்குவதற்கு, வாங்கிக்கொண்டு வாகனங்களில் பயணிப்பதற்கும் துபாய் காவல் துறையால் வழங்கப்படும் தனிநபர் அட்டையை வைத்திருக்க வேண்டும். இப்படியான விதிமுறைகள் இருந்த நிலையில், துபாயின் இந்த அறிவிப்பு சுற்றுலா பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    அப்பல்லோ 7 விண்வெளி பயணத்தில் இருந்த கடைசி விண்வெளி வீரர் உயிரிழப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....