Sunday, March 17, 2024
மேலும்
    Homeஅறிவியல்அப்பல்லோ 7 விண்வெளி பயணத்தில் இருந்த கடைசி விண்வெளி வீரர் உயிரிழப்பு

    அப்பல்லோ 7 விண்வெளி பயணத்தில் இருந்த கடைசி விண்வெளி வீரர் உயிரிழப்பு

    நாசாவின் முதல் வெற்றிப்பயணம் என்று சொல்லப்படும் அப்பல்லோ 7 விண்வெளி பயணத்தில் இருந்த கடைசி முன்னாள் விண்வெளி வீரர் கன்னிங்ஹாம் காலமானார். 

    நாசாவின் மிக முக்கிய மற்றும் உலகப் புகழ்ப்பெற்ற பயணமாக அமைந்தது 1968 ஆம் ஆண்டு நடைபெற்ற அப்பலோ 7 விண்வெளிப் பயணம். இந்தப் பயணம் நிலாவில் தரையிறங்குவதற்கு முதல் படியாக அமைந்தது. இந்தப் பயணத்தில் மூன்று விண்வெளி வீரர்கள் பங்கேற்றனர். அதில் அமெரிக்க விமானப்படை மேஜர் டான் எப் ஐசெல் மற்றும் அமெரிக்க கடற்படை கேப்டன் வால்டர் எம்.ஷிரா ஆகிய இரண்டு பேரும் முன்னதாக இறந்துவிட்டனர். 

    இந்நிலையில், அப்பல்லோ 7 விண்வெளி பயணத்தின் கடைசி விண்வெளி வீரர் வால்டர் கன்னிங்ஹாம் கடந்த ஜனவரி 3 ஆம் தேதி காலமானதாக நாசா உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் கன்னிங்ஹாம் மனைவி அவரின் இறப்பிற்கான காரணத்தை குறிப்பிடவில்லை. 

    அதே சமயம் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், அப்பில்லோ 8 பயணத்தின் போது விண்வெளி நிறுவனம் அடுத்த குழுவினரை அனுப்பும் வகையில் மூன்று விண்வெளி வீரர்களும் சரியான பயணத்தை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது. 

    கன்னிங்ஹாம் நாசாவுக்கு ஆற்றிய பங்கை எப்போதும் நினைவு கூறும் என்றும் அவரின் குடும்பத்திற்கு தங்களின் இரங்கலைத் தெரிவித்துகொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்தியா vs இலங்கை; அமர்க்களமாக அமையுமா இன்றைய ஆட்டம்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....