Sunday, March 17, 2024
மேலும்
    Homeசமூக வலைதளம்பெங்களூரில் இருந்து மும்பைக்கு பறந்த பிரியாணி; குடிபோதையில் ஆர்டர் செய்த பெண்!

    பெங்களூரில் இருந்து மும்பைக்கு பறந்த பிரியாணி; குடிபோதையில் ஆர்டர் செய்த பெண்!

    மும்பையில் பெண் ஒருவர் குடிபோதையில் பெங்களூரில் உள்ள ஒரு உணவகத்தில் பிரியாணியை ஆர்டர் செய்து வாங்கிய சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது. 

    ‘இந்த பொறப்புதான் நல்லா ருசிச்சு சாப்பிடக் கெடச்சது..’ என்பதை உலகம் முழவதும் பெரும்பாலான மக்கள் பின்பற்றி வருகின்றனர். பிடித்த உணவை எங்கிருந்தாலும் தேடிச்சென்று வாங்கி சாப்பிடுகின்றனர். குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் பிரியாணியின் மவுசு என்பது பெருமளவில் அதிகரித்துள்ளது என்பதை மறுக்க இயலாது. 

    ஸ்விகி, சொமேட்டோ போன்ற நிறுவனங்கள் கூட கடந்த ஆண்டுகளில் அதிகம் டெலிவரி செய்யப்பட்ட உணவாக பிரியாணியையே குறிப்பிட்டுள்ளனர். பிரியாணி சாப்பிடுவதற்காக ஈடுபடும் செயல்களை பலரும் வீடியோவாகவும், எழுத்துகளாகவும்  சமூகவலைதளத்தில் பதிவிடுவதும், அது வைரலாவதும் அவ்வபோது நடந்து வருகிறது. 

    அந்த வகையில், மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர், பிரியாணி சாப்பிட ஆர்டர் செய்தது வைரலாகியுள்ளது. பிரியாணி ஆர்டர் செய்வதில் என்ன வைரல் என்றால், அப்பெண் குடிபோதையில் பெங்களூரில் உள்ள ஒரு உணவகத்தில் பிரியாணியை ஆர்டர் போட, அந்த உணவகமும் ஆர்டரை ஏற்றுக்கொண்டது. 

    பிரியாணியை தயார் செய்து அந்த உணவகம் மும்பைக்கு அனுப்பியுள்ளது. இதை அந்தப்பெண் தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்க்ரீன் ஷார்ட் எடுத்து பகிரிந்துள்ளார். ஒரு பிரியாணிக்காக 2500 பில் வந்துள்ளதை கண்டு அப்பெண் அதிர்ச்சியடைந்துள்ளார். அதேநேரம், குடிபோதையில் இதை செய்ததாகவும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இந்தப் பெண்ணின் ட்விட்டை தற்போது பலரும் பகிர்ந்து வருகின்றனர். 

    இந்தியாவின் சுதந்திர போராட்ட வரலாறு முறையாக பதிவு செய்யப்படவில்லை- தமிழ்நாடு ஆளுநர்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....