Sunday, March 17, 2024
மேலும்
    Homeஜோதிடம்இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்? துலாம் முதல் மீனம் வரை

    இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்? துலாம் முதல் மீனம் வரை

    துலாம்: 

    துலாம் ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு சற்று சுமாராகத் தான் காணப்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்பு உண்டு. இல்லத் திருமண காரியங்கள் கைக்கூடி வரும். அலுவலக ரீதியாக பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதை நீங்கள் பொறுமையுடன் கையாள வேண்டும். தொழிலில் ஓரளவு லாபமே கிடைக்கும். இருப்பினும் முயற்சியை கைவிடாமல் இருப்பது நல்லது. பெண்களுக்கு மன சோர்வும் உடல் சோர்வும் ஏற்பட வாய்ப்பு உண்டு. 

    விருச்சிகம்: 

    விருச்சிக ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு ஓரளவு நன்மைகள் நடைபெறும் நாட்களாக காணப்படுகின்றன. முக்கிய முடிவுகளை நன்கு ஆராய்ந்து எடுப்பது நல்லது. திருமண முயற்சிகள் கைக்கூடி வரும். வீட்டில் ஓரளவு மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். அலுவலக பணியால் சற்று உடல் சோர்வும் மன சோர்வும் கானப்படும். தொழிலில் ஓரளவு லாபம் இருக்கும். புதிய முயற்சிகளில் சற்று கூடுதல் கவனம் செலுத்தினால் வெற்றி கிடைக்கும். சிலருக்கு அலுவலக பணிகள் மூலம் நல்ல சலுகைகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. 

    தனுசு: 

    தனுசு ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும் நல்ல நாட்களாக காணப்படுகின்றன. கணவன்-மனைவி இடையே சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். குடும்பத்தில் சற்று அனுசரித்து செல்வது நல்லது. புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். உறவினர்கள் மூலமாக சில நன்மைகள் நடைபெறும். சிலருக்கு வெளியூர் பயணங்கள் செல்லும் வாய்ப்பு உண்டாகும். அலுவலக பணிகள் கூடுவதால் ஈடுபடுவதால் சோர்வுடன் காணப்படுவீர்கள். தொழிலில் ஓரளவு லாபம் இருக்கும். 

    மகரம்: 

    மகர ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு, நன்மைகள் நடைபெறும் நல்ல நாட்களாக அமைந்துள்ளன. குடும்ப நலனில் சற்று அக்கறையுடன் இருப்பது நல்லது. கணவன்-மனைவி இடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும். தேவையற்ற விவாதங்களை தவிர்த்து விடுவது நல்லது. வாகனத்தில் செல்லுகையில் சற்று கவனமுடன் இருக்க வேண்டும். அலுவலகத்தில் உற்சாகமாக காணப்படுவீர்கள். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். 

    கும்பம்: 

    கும்ப ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு, நன்மைகள் நடைபெறும் நல்ல நாட்களாக காணப்படுகின்றன. கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தில் சற்று சீரானநிலை உண்டாகும். அலுவலகத்தில் சக பணியாளர்களுடன் அனுசரித்து நண்டத்துக்கொள்வது பிரச்சனைகளை தவிர்க்க உதவும். தொழிலில் சற்று கூடுதலாக உழைத்தால் நல்ல லாபம் கிடைக்கும். 

    மீனம்: 

    மீன ராசிக்காரர்களே இந்த வார நாட்கள் உங்களுக்கு, ஓரளவு நன்மைகள் நடைபெறும் நாட்களாக காணப்படுகின்றன. உடல் ஆரோக்கியத்தில் சற்று தெளிவு கிடைக்கும். சில முக்கிய முடிவுகள் எடுப்பதில் பொறுமை அவசியம். தொழிலில் லாபம் அதிகரிக்கும். அலுவலக பணிகளில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். குல தெய்வ வழிபாடு செய்யும் வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு வெளியூர் பயணங்கள் செல்ல தகுந்த நேரமாக இந்நேரம் இருக்கும். வாக்குவாதங்களை தவிர்த்து அமைதி காப்பது நல்லது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....