Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்55 பேட்டரிகளை விழுங்கிய பெண் -அயர்லாந்து மருத்துவர்கள் நிகழ்த்தி காட்டிய சாதனை

    55 பேட்டரிகளை விழுங்கிய பெண் -அயர்லாந்து மருத்துவர்கள் நிகழ்த்தி காட்டிய சாதனை

    அயர்லாந்து மருத்துவர்கள் 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் குடல் மற்றும் வயிற்றில் இருந்து அதிகபட்சமாக 55 உருளை பேட்டரிகளை வெற்றிகரமாக அகற்றி, உயிரை காப்பற்றியிருக்கும் சம்பவம் மருத்துவ உலகினரிடையே ஆச்சர்யத்தையும், பாராட்டையும் பெற்றுள்ளது .

    அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த 66 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தன்னைத் தானே வருத்திக்கொள்ள முடிவு செய்து 50-க்கும் மேற்பட்ட ‘ஏஏ மற்றும் ஏஏஏ’ ரக பேட்டரிகளை விழுங்கியுள்ளார். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு டப்ளினில் உள்ள செயின்ட் வின்சென்ட் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, அவரது வயிற்று வலிக்கான காரணத்தை மருத்துவர்கள் கேட்டறிந்துள்ளனர். அப்போது அவர் பேட்டரிகளை விழுங்கிய தகவல்களை கூறியுள்ளார். நோயாளியின் அந்த விளக்கத்தைத் ஏற்றுக்கொண்ட மருத்துவர்கள் ,உடனடியாக எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் அவரது வயிற்றில் ஐந்து AA பேட்டரிகளும், 50 AAA பேட்டரிகளும் என மொத்தம் 55 உருளை பேட்டரிகள் இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    இதையும் படிங்க: 3 ஆண்டுகளாக வெளியேவராமல் வீட்டுக்குள்ளேயே… இருட்டில் இருந்த குடும்பம்! பாசத்தால் நடந்த அவலம்

    அதுமட்டுமின்றி அதிர்ஷ்டவசமாக அந்த பேட்டரிகள் அனைத்தும் அவரது இரைப்பை குடல், பாதையை அடைத்துக்கொண்டு அதை தடுக்கும் வகையில் இல்லை என்பதை எக்ஸ்-ரேவின் மூலம் உறுதி செய்துள்ளனர். இதனையடுத்து இயற்கையாகவே நோயாளியின் மலம் வழியாக அந்த பேட்டரிகளை வெளியேறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். மருத்துவர்கள் ஒரு வார காலம் வரை காத்திருந்து மேற்கொண்ட முயற்சியில் ஐந்து AA பேட்டரிகள் மட்டும் வெளியே வந்துள்ளது.

    மீதமுள்ள பேட்டரிகளையும் இதே பாணியில் எடுத்து விடலாம் என்று முயற்சி மேற்கொண்டிருந்த நிலையில் அப்பெண்ணிற்கு தாங்க முடியாத வயிற்று வலி மற்றும் பசியின்மை ஏற்படவே, மருத்துவர்கள் இனியும் தாமதிக்காமல் அவரது வயிற்றில் உள்ள பேட்டரிகளை உடனடியாக அகற்றியாக வேண்டும் என்று
    அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.

    அறுவை சிகிச்சைக்கு முன்பு அந்த பெண்ணின் வயிறு மேல் மற்றும் கீழ்நோக்கி வீங்கியிருப்பது கண்டறிந்த, மருத்துவ நிபுணர்கள் முதல் கட்டமாக அவரது வயிற்றில் இருந்து மொத்தம் 46 பேட்டரிகளை அகற்றினர். அதே நேரத்தில் அவரது பெருங்குடலில் மீதம் இருந்த நான்கு பேட்டரிகளை மலக்குடலில் “பால்” செய்து அகற்றியுள்ளனர்.

    இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு அந்த பெண் இயல்பு நிலைக்கு வந்துள்ளார். இதனையடுத்து இந்த அறுவை சிகிச்சை குறித்து பேசிய மருத்துவர்கள் உருளை வடிவ பேட்டரிகளை உட்கொள்வது ஒரு “அரிதான” சுய-தீங்கு விளைவிக்க கூடிய ஒன்று. இது மியூகோசல் காயம், துளைத்தல் மற்றும் அடைப்பு உள்ளிட்ட பல தீவிர சிக்கல்களை உண்டாக்க கூடியது. ஆனால் இவருக்கு அந்த மாதிரி எந்த பிரச்சனைகளும் இல்லாமல் நடந்திருப்பது, ஆச்சர்யமான, அரிதிலும் அரிதான ஒன்று என்று செயின்ட் வின்சென்ட் மருத்துவமனையின் கதிரியக்க வல்லுநர்கள் மற்றும் பெருங்குடல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதுபோன்ற ஒரு கடினமான அறுவை சிகிச்சை மருத்துவ வரலாற்றில் முதன் முறையாக அதுவும் ஒரே நேரத்தில், பெண்ணின் குடல் மற்றும் வயிற்றில் இருந்து 55 பேட்டரிகளை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றிய நிகழ்வு மருத்துவ நிபுணர்களிடையே மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது.

    இந்த அறுவை சிகிச்சை குறித்த தகவல்கள் அயர்லாந்து மருத்துவ நாளிதழான ‘தி ஹப் போஸ்டில்’ வெளியிடப்பட்ட ஒரு செய்தி அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....