Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்மின்துறையை தனியார் மயமாக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு: திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டம்...

    மின்துறையை தனியார் மயமாக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு: திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டம்…

    புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜந்தர் மந்தரில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா.சிவா தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறையை தனியார் மயமாக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில்மின்சாரத் துறையை தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்த மசோதா -2022 ஐ எதிர்த்து, தொழிற் சங்கங்கள் சார்பில் இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது.

    இதில் புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான இரா.சிவா அவர்கள் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நாஜிம், அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார், நாக.தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு மின்சார சட்ட திருத்த மசோதா -2022 ஐ எதிர்த்தும், புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஊழல்.. ஊழல்.. திமுக குறித்து ஆவேசத்தில் குற்றசாட்டுகளை அடுக்கிய எடப்பாடி பழனிச்சாமி..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....