Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதீபாவளியை முன்னிட்டு தனது ஊழியர்களுக்கு 1.2 கோடி செலவில் பரிசு; கார், பைக்குகளை பெற்ற...

    தீபாவளியை முன்னிட்டு தனது ஊழியர்களுக்கு 1.2 கோடி செலவில் பரிசு; கார், பைக்குகளை பெற்ற ஊழியர்கள்

    தீபாவளியையொட்டி ஊழியர்களுக்காக கார், இருசக்கர வாகனம் முதலானவற்றை நகைக்கடை உரிமையாளர் ஒருவர் பரிசாக வழங்கியுள்ளார்.

    பண்டிகை காலங்களில் நிறுவன உரிமையாளர்கள் தங்களது ஊழியர்களுக்கு போனஸ், பரிசு பொருட்கள் போன்றவற்றை தருவது வாடிக்கையான ஒன்றாகவே இருந்து வருகிறது. 

    அந்த வகையில்தான் சல்லானி ஜுவல்லரி உரிமையாளர் ஒருவர் தங்களது ஊழியர்களுக்கு கார், இருசக்கர வாகனம் முதலானவற்றை பரிசாக வழங்கியுள்ளார். சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஜெயந்தி லால். இவர் சல்லானி ஜுவல்லரி என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். ஓணம், ஆயுதபூஜை, தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகைகளைத் தொடர்ந்து நகை வியாபாரம் சிறப்பாக நடந்துள்ளது.

    ஆதலால், இவர் தனது நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்களில் 8 பேருக்கு காரும், 18 பேருக்கு இருசக்கர வாகனமும் பரிசாக அளித்துள்ளார். இதற்காக அவர் மொத்தமாக 1.2 கோடி செலவு செய்துள்ளார். 

    இது குறித்து சல்லானி ஜுவல்லரி உரிமையாளர் ஜெயந்திலால் தெரிவித்துள்ளதாவது:

    பண்டிகை காலத்தையொட்டி தனது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உழைத்ததால், அவர்களுக்கு இந்த பரிசை வழங்கினேன்.  எனது ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களின் பணிகளை அங்கீகரிக்கும் வகையிலும் இந்த பரிசை நான் வழங்கி வருகிறேன்.  மேலும், குறுகிய இடைவெளியில் பண்டிகை நாள்களில் கூடுதலாக உழைத்த தனது ஊழியர்களால் லாபம் கிடைத்ததாகவும், என்னுடைய எல்லா ஏற்ற இறக்கங்களிலும் உடன் பயணித்தவர்களுக்காக நான் செய்யும் சிறிய நன்றிக்கடன்தான் இது. 

    இவ்வாறாக ஜெயந்தி லால் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: இபிஎஸ் வெளியே, ஓபிஎஸ் உள்ளே…. நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்ட சட்டப்பேரவை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....