Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுமுகமது ஷமிக்கு கடைசி ஓவர் மட்டும் கொடுத்தமைக்கு காரணம் என்ன? - ரோஹித் சர்மா சொன்ன...

    முகமது ஷமிக்கு கடைசி ஓவர் மட்டும் கொடுத்தமைக்கு காரணம் என்ன? – ரோஹித் சர்மா சொன்ன பதில்

    இந்தியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஷமிக்கு கடைசி ஓவர் மட்டும் கொடுத்தது ஏன் என்ற கேள்விக்கு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார்.

    இருபது ஓவர் உலகக் கோப்பைப் போட்டிக்காக பிரிஸ்பேனில் நடைபெறும் முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 

    இதைத்தொடர்ந்து, இந்திய அணி பேட்டிங்கில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் களமிறங்கினர். இதில் ரோஹித் சர்மா 15 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். இதற்கு பின் களமிறங்கிய கோலியும் 19 ரன்களில் நடையை கட்டினார். 

    கே.எல். ராகுல் 57, சூர்யகுமார் யாதவ் 50 ரன்கள் அடிக்க இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது. மேலும், பாண்டியா 2, தினேஷ் கார்த்திக் 20 ரன்கள் எடுத்தார்கள். கேன் ரிச்சர்ட்சன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ஆஸ்திரேலிய அணி. 

    இதையும் படிங்க: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டம்…போராடிய ஃபின்ச், தளராத இந்தியா

    ஆஸ்திரேலிய அணி ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய மிட்செல் மார்ஷ் மற்றும் ஆரோன் ஃபின்ச் ஆகியோர் அதிரடியாக விளையாடினார். 35 ரன்கள் எடுத்த நிலையில் மிட்செல் மார்ஷ் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 

    இதையடுத்து, களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் 11 ரன்களிலும், மேக்ஸ்வெல் 23 ரன்களிலும் வெளியேற மறுமுனையில் ஆரோன் ஃபின்ச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 76 ரன்கள் எடுத்திருந்தபோது தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதன்பிறகு வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு தங்களது விக்கெட்டுகளை பறிகொடுக்க, 20 ஓவர்களின் முடிவில் ஆஸ்திரேலிய அணி பத்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. 

    இந்த ஆட்டத்தின் 19-வது ஓவரில் டிம் டேவிட்டை 5 ரன்களுக்கு ரன் அவுட் செய்தார் கோலி. 19-வது ஓவரில் 5 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஹர்ஷல் படேல். இதனால் கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா அணிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டன.

    இந்தச் சூழலில் யாரும் எதிர்பாராதவிதமாக கடைசி ஓவர் ஷமிக்கு வழங்கப்பட்டது. அதுதான் இன்றைய ஆட்டத்தில் அவர் வீசும் முதல் ஓவர். கம்மின்ஸ் சிக்ஸருக்கு அடிக்க முயன்றபோது கோலி எல்லைக்கோட்டுக்கு அருகே அற்புதமாக கேட்ச் பிடித்து 7 ரன்களில் அவரை வெளியேற்றினார். அடுத்தப் பந்தில் அஷ்டன் அகர் ரன் அவுட் ஆனார். அடுத்தப் பந்தில் இங்லிஷ் 1 ரன்னில் போல்ட் ஆனார். கடைசிப் பந்தில் வெற்றிக்கு 7 ரன்கள் தேவை என்கிற நிலையில் கேன் ரிச்சர்ட்சனை போல்ட் செய்தார் ஷமி. கடைசி 4 பந்துகளிலும் விக்கெட்டுகள் வீழ்ந்தன. 19-வது ஓவரை வீசிய ஹர்ஷல் படேல் 5 ரன்களும் கடைசி ஓவரை வீசிய ஷமி 4 – ரன்களும் மட்டும் கொடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணங்களாக அமைந்தார்கள்.

    இந்நிலையில் ஷமிக்குக் கடைசி ஓவரை மட்டும் வழங்கியது பற்றி இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவிடம் கேட்கப்பட்டது. அப்போது, ‘உண்மையில் நீண்ட நாளைக்குப் பிறகு விளையாட வந்துள்ளார் ஷமி. எனவே அவருக்கு ஒரு ஓவர் மட்டுமே கொடுக்க எண்ணினோம். ஆரம்பத்திலிருந்து அதுதான் திட்டமாக இருந்தது. ஷமி கடைசி ஓவர்களில் பந்துவீசுவார். புதிய பந்தில் அவர் எப்படி அபாரமாகப் பந்துவீசுவார் என்பதை நாங்கள் அறிவோம். நேராகக் கடைசி ஓவரில் பந்துவீசுவது போன்ற சிறு சவாலை அவருக்கு அளிக்க எண்ணினோம். அது எப்படி இருந்தது என்பதை அனைவரும் பார்த்தோம்’ என்று பதிலளித்தார். 

    இதையும் படிங்க : தெற்கு ரயில்வே தந்த தீபாவளி போனஸ்…கடுப்பில் மக்கள்! 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....