Friday, March 24, 2023
மேலும்
    Homeவாகனம்பிஎம்டபிள்யூ பைக்குகள் உங்களுக்கு பிடிக்குமா? அப்போது இதைத் தெரிந்துக்கொள்ளுங்கள்!

    பிஎம்டபிள்யூ பைக்குகள் உங்களுக்கு பிடிக்குமா? அப்போது இதைத் தெரிந்துக்கொள்ளுங்கள்!

    பிஎம்டபிள்யூ பைக்குகள் பொதுவாக பல பேருக்கு மிகவும் பிடிக்கும் அதற்கு காரணம் அதன் என்ஜின் வடிவமைப்பும் அதன் தோற்றமும் தான். குறிப்பாக இளைஞர் பட்டாளத்திற்கு மிகவும் பிடிக்கக் காரணம் இதன் என்ஜின் வேகம் தான். அதுவும் 2022 புது வடிவமைப்பாக கண்ணைக் கவரும் மூன்று வண்ணங்களில் வெளிவந்துள்ளது. இவ்வளவு வடிவமைப்பும் எப்படி சாத்தியம் ஆனது தெரியுமா பிஎம்டபிள்யூ பைக்குகள் எப்படி உருவானது என்று இங்கே பாருங்கள். 

    முதல் உலகப் போருக்கு பின்பு ஜெர்மன் நாடு விமானத்திற்கான என்ஜின் தயாரிப்புகளில் ஈடுபடக் கூடாது என்று கட்டுப்பாட்டில் இருந்தது. இதனால் ஜெர்மன் நாட்டின் வணிகம் பெருமளவில் பாதித்தது. இதைக் கருத்தில் கொண்டு விமான என்ஜின் தயாரிப்புகளை விட்டுவிட்டு புதிதாக இரு சக்கர வாகனத்திற்கான மோட்டார் என்ஜின் தயாரிப்பு பணிகளில் ஈடுபடத் தொடங்கியது. 

    • 1922 ஆம் ஆண்டு ஜெர்மன் தனது மோட்டார் சைக்கிளை முதன் முதலாக உருவாக்க தொடங்கியது. இது இப்போது பைக்குகளுக்கும் கார்களுக்கும் இடையே வேறுபாட்டினை அறிய மிகவும் முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது. 
    • பல ஆண்டுகளுக்கு பின்பு பிஎம்டபிள்யூ ஒரு ப்ரீமியம் பிராண்ட் ஆக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது.
    • பிஎம்டபிள்யூ ப்ரீமியமாக இருந்தாலும் தனது ஆரம்பக் காலத்தில் உயிர் பிழைப்பதற்கு மட்டும் தான் மோட்டார் சைக்கிள்களை தயாரித்தது. 
    • பிறகு புதிய உள்ளீடான ‘பாக்சர் பிளாட் ட்வின் என்ஜின்’ தனித்துவம் பெற்றது. நூறு ஆண்டுகளை கடந்த பிறகு, இருபினும் இந்த என்ஜின் வகையை இவர்கள் தயாரிக்கவில்லை என்றாலும் இவர்களுக்கு என்று ஒரு அடையாளத்தை பெற்றுத்தந்தது. மேலும் இந்த என்ஜின் 150 ஹார்ஸ் பவரைக் கொண்டது. 
    • 30-களில் எல்லாவித மோட்டார் சைக்கிள்களும் ஒரே விதமாக ஒரு சில மாற்றங்களைக் கொண்டே உருவாகின. ஆனால் இவர்கள் மிகுந்த தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டனர். 
    • பிஎம்டபிள்யூ உற்பத்தியாளர்கள் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால்  இரண்டாம் உலகப் போரிலும் மோட்டார் சைக்கிள்களைத் தயாரித்து கொடுத்ததன் மூலம் போர்காலத்திலும் அவர்கள் நன்றாக சம்பாதித்தார்கள்.
    • மேற்கு ஜெர்மனியை நேச நாட்டு படைகள் ஆக்கிரமிப்பு செய்தபோது அவர்களின் மோட்டார் சைக்கிள்களை பராமரிக்க மீண்டும் இவர்களின் சேவை தேவைப்பட்டது. 1948 மீண்டும் தங்களது உற்பத்தி பணிகளைத் தொடங்கினர் பிஎம்டபிள்யூ குழுவினர். 
    • 50 –களில் பிஎம்டபிள்யூ ஐரோப்பிய நாடுகள் அனைத்திற்கும் முக்கிய பிராண்ட் ஆக மாறியது. ஆனால் 1960 -களில் தான் உலக அளவில் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். 
    • மோட்டார் சைக்கிள்களின் ஆரம்பக் காலங்களில் வேகம் பெரிதாக இருந்தது. அதை இவர்கள் பயன்படுத்திக் கொண்டனர். மற்ற நிறுவனங்களைக் காட்டிலும் இவர்களின் மோட்டார் சைக்கிள்களின் வேகம் மிகுந்தன. அதனால் உலக அளவில் இவர்கள் பெரும் பேரைப் பெற்றனர். 
    • பிஎம்டபிள்யூ மோட்டர்ரட் உற்பத்தியில் மிக முக்கியமாக பேசப்படும் பொருள் இவர்கள் 80-களில் உருவாக்கிய அட்வென்ச்சர் மோட்டார் சைக்கிள்கள் தான்.
    • இவர்கள் உருவாக்கிய எண்டியூரோ வடிவைப்பு மிகவும் கவரத்தக்க ஒன்றாக சாகசப் பயணங்களில் ஈடுபட வைத்தது. 
    • 2000-களின் தொடக்கத்தில் இவர்களுக்கு என தனி வாடிக்கையாளர்கள் உலகம் எங்கும் கிடைத்தனர். GS என்ற இவர்களின் வடிவைப்பு இந்த பேரை நிலை நாட்டியது எனலாம். ஆனால் வேறு சில புதிய வடிவமைப்புகள் இவர்களுக்கு வாடிக்கையாளர்களின் மத்தியில் தோல்வியையே தந்தது. 
    • இருப்பினும் இவர்களின் புதிய வடிவைப்பான s1000 ஸ்போர்ட் பைக் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் இவர்கள் GS அட்வென்ச்சர் பைக்கின் மூலம் நல்ல பெயரைப் பெற்றார்கள். 
    • அவர்களின் சிலத் தோல்விக்கு பின் தொடர்ந்து அவர்கள் வெளியிட்ட மோட்டார் சைக்கிள்கள் பெரும் வெற்றியை கொடுத்து வருகிறது. இந்த வாகனத்தை பயன்படுத்தலாமா என்று கேள்வி எழும் சிலருக்கு GS ஒன்றில் பயணித்த பிறகு எந்த குழப்பமும் இல்லாமல் இதையே தான் வாங்குவர். 
    • வாழ்வில் உயிர் பிழைப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் இப்போது உலகின் முன்னணி பைக்குகள் மற்றும் கார்களின் வரிசையில் நூற்றாண்டைக் கடந்து முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. 
    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    chennai metro station

    மெட்ரோ பயணிகளின் கவனத்திற்கு! வாகனங்களை நிறுத்த புதியமுறை

    மெட்ரோ இரயில்‌ நிலையங்களில்‌ உள்ள வாகன நிறுத்துமிடங்களில்‌ பயணிகள்‌ தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு பணம்‌ செலுத்துவதற்கு பதிலாக மெட்ரோ இரயில்‌ பயண அட்டை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்‌ என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  பணமில்லா...