Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ரிப்போர்ட் கார்டு எப்போ தருவீங்க ? : திமுகவை கேள்வி கேட்கும் மக்கள் நீதி மையம்

    ரிப்போர்ட் கார்டு எப்போ தருவீங்க ? : திமுகவை கேள்வி கேட்கும் மக்கள் நீதி மையம்

    திமுக வாக்குறுதியில் சொன்ன மாதிரி எப்பொழுது நிறைவேற்றப்பட்ட மற்றும் பணியில் இருக்கும் திட்டங்களைப் பற்றிய ரிப்போர்ட் கார்டு வெளியிடப்போகிறது என்று மக்கள் நீதி மையத்தின் சார்பாக கேள்வி கேட்கப்பட்டுள்ளது. 

    இது குறித்த அறிக்கையை மக்கள் நீதி மையத்தின் மாநிலச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிக்கை எண் 491ல் ஒவ்வொரு மாதத்தின் முதல் பணிநாளன்றும்  திமுகவின் தேர்தல் அறிக்கை மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைள் குறித்து ரிப்போர்ட் கார்டு வெளியிடப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இதனை முதல்வரே நேரில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து சமர்பிப்பார் என்றும் கூறப்பட்டிருந்தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    இதனைப் பற்றி மக்கள் நீதி மையத்தின் தலைவர் திரு.கமலஹாசன் அவர்கள் கடந்த 26.10.21 அன்று எப்பொழுது ஆய்வுகள் நடத்தப்பட்டு ரிப்போர்ட் கார்டு வழங்கப்படும் என்று கேள்வி எழுப்பி இருந்தார். ஆனால், திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் சொல்லியவாறு ஒருமுறை கூட ஊடகங்களைச் சந்தித்து அறிக்கை வெளியிடவில்லை. இருந்தாலும் வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதியாவது ஊடகங்களைச் சந்தித்து திமுக அறிக்கையை வெளியிடுமா ? என்று மக்கள் நீதி மையம் கேள்வி எழுப்புகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

    மேலும், நேர்மையாக அரசை நடத்துக்கிறோம் என்றும் கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி விட்டோம் என்று மகிழ்ச்சி கொள்ளும் முதல்வர் நாளையாவது டெல்லியில் உள்ள செய்தியாளர்களைச் சந்தித்து ரிப்போர்ட் கார்டு குடுப்பார் என்று நம்பலாமா ? என்று நக்கல் தொனியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    ஒருவேளை கொடுத்த வாக்குறுதிகளை எதற்கு நிறைவேற்ற வேண்டும். அப்படி ஒன்றும் அவசியமில்லையே என்று திமுக கடந்து போகுமானால், இதுவரை திமுகவின் வாக்குறுதிகளில் நிறைவேற்றப்பட்டது எவை ? மற்றும் ஏமாற்றப்பட்டவை எவை ? மற்றும் இன்னும் ஆரம்பிக்காதது எவை ?  போன்ற விவரங்களை மக்கள் நீதி மையம் உரிய தரவுகளோடு விரைவில் வெளியிடும் என்று எச்சரித்துள்ளது. 

    திமுக உறுதி அளித்த 505 வாக்குறுதிகளில் அனைத்தையும் 10 மாதங்களுக்குள் நிறைவேற்றவேண்டும் என்று கூறவில்லை. குறைந்தபட்சம் எவ்வளவை நிறைவேற்றி உள்ளீர்கள் என்று ஆதாரத்தோடு வெளியிடுங்கள் என்றுதான் கேட்கிறோம். அதனையும் நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளின் அடிப்படையில் தான் கேட்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். 

    சொல்லாததைச் செய்யவேண்டாம் ! குறைந்தபட்சம் சொன்னதையாவது செய்யுங்கள் என்று என்று அக்கட்சியின் தலைவர் திரு.கமலஹாசன் அவர்களின் பாணியிலேயே அந்த அறிக்கை அமைந்துள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....