Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமனித சதைகளை வெட்டி சமைத்து சாப்பிட்ட அரக்க ஆசாமிகள்; நரபலியில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்

    மனித சதைகளை வெட்டி சமைத்து சாப்பிட்ட அரக்க ஆசாமிகள்; நரபலியில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்

    கேரளாவில் தமிழகப் பெண் உள்பட இரண்டு பெண்கள் நரபலி கொடுத்து அவர்களின் துண்டு துண்டாக வெட்டி புதைத்த 3 நபர்கள் கைது செய்யப்பட்டனர். 

    கேரள மாநிலம் கொச்சியில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த பத்மா என்பவர், லாட்டரி விற்று வந்தார். இவரைப் போலவே, காலடியை சேர்ந்த ரோஸ்லின் என்பவரும் லாட்டரி விற்கும் தொழில் செய்து வந்தார். 

    இந்நிலையில், பத்தினம்திட்டா மாவட்டத்தில் வேலை வாங்கித் தருவதாக இடைத்தரகர் ஒருவர் இருவரையும் அழைத்துச் சென்றார். ஆனால், பத்தினம்திட்டாவில் மசாஜ் சென்டர் நடத்தி வரும் லைலா-பகவந்த் சிங் தம்பதியினர், இவர்கள் இருவரையும் விரைவில் பணக்காரர்களாக மாற்றும் நோக்கில் நரபலி கொடுத்துள்ளனர். 

    இந்தச் சம்பவத்தை கண்டுபிடித்த கேரள காவல்துறையினர், நரபலி கொடுத்த தம்பதி மற்றும் இடைத் தரகர் ஆகிய மூவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    காவல்துறை நடத்திய விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    இடைத்தரகர் போலி மந்திரவாதி முகம்மது ஷபி பேஸ்புக் கணக்கு ஒன்றை தொடங்கியுள்ளார். அந்த அக்கவுன்ட் மூலம் பத்தனம்திட்டா மாவட்டம் இலந்தூரில் உள்ள பகவல் சிங்கை தொடர்பு கொண்டுள்ளார். 

    உடல் நலம் நன்றாக இருக்கவும், செல்வம் செழிக்கவும் ஒரு பூஜை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். பகவல் சிங்கின் வீட்டுக்குச் சென்று வீடு அமைந்துள்ள இடங்களை பார்வையிட்டுவிட்டு ஒரு பெண்ணை நரபலி கொடுத்து பூஜை செய்தால் எல்லாம் சரியாகி விடும் என்றும் செல்வம் கொட்டும் என சொல்லியுள்ளார். மேலும் ‘நரபலிக்கு தேவையான பெண்ணை நானே அழைத்து வருகிறேன்’ எனவும் ஷபி தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க:இறந்த மகனை தோளில் சுமந்து சென்ற அவலம்: பார்ப்போரை கண் கலங்க வைத்த நிகழ்வு…

    கொலை செய்யப்பட்ட பத்மாவை ஒப்படைக்க முகமது ஷபிக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் தருவதாக அவரிடம் பேசப்பட்டுள்ளது. மேலும் ரூபாய் 15 ஆயிரத்தை முகமது ஷபி முன்பணமாக வாங்கி இருக்கிறார். 

    லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வந்த ரோஸ்லின் என்ற பெண்ணிடம் 10 லட்சம் ரூபாய் கொடுப்பதாக சொல்லி அவரை அழைத்து சென்று ஷபி மற்றும் பகவல்சிங் லைலா முதலில் நரபலி கொடுத்துள்ளனர். 

    அப்படி நரபலி கொடுத்ததற்கு உரிய பலன் கிடைக்காத காரணத்தால், தமிழகத்தின் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பத்மாவையும் நரபலி கொடுத்துள்ளனர். இந்த இரண்டு பெண்களையும் வெவ்வேறு நாட்களில் சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி அவர்களை மயக்கி முகமது ஷபி அழைத்து சென்றுள்ளார். 

    பாலியல் சைக்கோவை நம்பி ஏமாந்த அந்தப் பெண்கள், அங்கு சினிமா ஷூட்டிங் நடைபெறுவதாக கூறி அவர்களை ஆடைகள் இல்லாமல் நிர்வாணமாகக் கட்டிலில் கட்டி வைத்து, அவர்களின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். 

    இதனையடுத்து, நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியம் கிடைக்கும் என கூறி முகமது ஷபி கூறியதன் பேரில் இருவரின் உடல்களையும் 60க்கும் மேற்பட்ட துண்டுகளாக வெட்டி சமைத்து சாப்பிட்டுள்ளனர். 

    இதனை தொடர்ந்து, மீதமுள்ள துண்டுகளை வீட்டின் பின்புறம், குழி தோண்டி புதைத்துள்ளனர். நரபலி கொடுக்கப்பட்ட இரண்டு பெண்களின் உடல் பாகங்களை டிஎன்ஏ சோதனைக்காக கொண்டு சென்றுள்ளனர் என கூறப்படுகிறது. 

    பூஜையின் போது ஷபி கணவர் பகவந்த் சிங் முன் மனைவி லைலாவுடன் பாலியல் உறவில் ஈடுபட்டு உள்ளார். முகம்மது ஷபி மீது கஞ்சா கடத்தல், பெண்களை விபச்சார தொழிலில் ஈடுபடுத்துதல் உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது. 

    மேலும், 75 வயது மூதாட்டி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கும் உள்ளது. ஷபி ஒரு சைக்கோவாக இருக்கலாம். விசாரணையில் அனைவரையும் கொன்று விடுவேன் என்றும், ரத்தத்தைக் கண்டு அஞ்சமாட்டேன் என்றும் ஷபி கூறியுள்ளார். 

    குற்றவாளி ஷபி குறித்து கொச்சி நகர உயர் காவல்துறை அதிகாரி எச்.நாகராஜு தெரிவித்துள்ளதாவது:

    “பத்து ஆண்டுகளில் 15 வழக்குகளில் ஷபி குற்றம் சாட்டப்பட்டுள்ளார். ஷபி ஒரு பாலியல் மனநோயாளி மற்றும் சோகமான நபர். ஷபி 6 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். 

    கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மனித கறி சாப்பிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. அதற்கான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது”  என தெரிவித்தார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....