Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்"அடுத்தவன மட்டும் கூப்புடாதிங்க...." - விஜய் ஆண்டனி சொன்ன அறிவுரை!

    “அடுத்தவன மட்டும் கூப்புடாதிங்க….” – விஜய் ஆண்டனி சொன்ன அறிவுரை!

    நடிகர் விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்து பேசுபொருளாய் மாறியுள்ளது. 

    இசையமைப்பாளராக வலம் வந்துக்கொண்டிருந்த விஜய் ஆண்டனி, நான் திரைப்படத்தின் மூலம் நடிகராக, கதாநாயகனாக அறிமுகமானார். நான் திரைப்படம் பெரிய ஹிட் அடிக்க அடுத்தடுத்து படங்களில் நடித்தார், விஜய் ஆண்டனி. சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் திரைப்படம் எவரும் எதிர்பாராத அளவுக்கு பெரிய வெற்றியை பெற்றது. இதன் மூலம் விஜய் ஆண்டனி பெரிய, நல்லவிதமான திருப்புமுனையை தன் திரைப்பயனத்தில் பெற்றார்.

    சமூகம் சார்ந்து தொடர்ந்து பல கருத்துகளை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பேசியும் பதிவும் செய்து வருகிறார், விஜய் ஆண்டனி. இளைஞர்கள் பலரும் இவரின் கருத்துகளை முன்மொழிந்தும் வருகின்றனர். இந்நிலையில், விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவுரை வழங்கியுள்ளார். 

    இதையும் படிங்க:வெற்றிபெற்ற “டார்ட் திட்டம் “: உறுதிப்படுத்திய விஞ்ஞானிகள் ,நடந்தேறிய அறிவியல் அதிசயம் …

    அதாவது, “உங்க குடும்பத்துல எதாவது பிரச்சனன்னா, முடிச்ச வரைக்கும் உங்களுக்குள்ள அடிச்சிக்கங்க, இல்ல விட்டு விலகிடுங்க, இல்ல கைல கால்ல விழுந்து சமாதானம் பண்ணி சேர்ந்து வாழுங்க..அடுத்தவன மட்டும் கூப்புடாதிங்க.. கும்மி அடிச்சி, கதைய முடிச்சிருவாங்க” என்று விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

    விஜய் ஆண்டனி நடிப்பில் பிச்சைக்காரன் -2 , கொலை, ரதம், மழை பிடிக்காத மனிதன் போன்ற திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. மேலும், இவர் நடிப்பில் உருவாகியுள்ள அக்னிச்சிறகுகள் திரைப்படம் தயராகியும் திரைக்கு வராமல் பல நாட்களாக தேங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....