Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்கார்த்தியின் சர்தார் இந்த தேதிலதான் தியேட்டருக்கு வருகிறாராம்...வெளிவந்த அப்டேட்!

    கார்த்தியின் சர்தார் இந்த தேதிலதான் தியேட்டருக்கு வருகிறாராம்…வெளிவந்த அப்டேட்!

    நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சர்தார் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    இரும்புத்திரை திரைப்படத்தின் மூலம் பலருக்கும் பரீட்சியமானவர், இயக்குநர் பி.எஸ்.மித்ரன். இரும்புத்திரை திரைப்படம் ரசிகர்களை பலமாகவே கவர்ந்திழுத்தது என்றே கூறவேண்டும். தற்போதும் பலரும் இரும்புத்திரை திரைப்படத்தை குறித்து பேசுவதை நம்மால் ஆங்காங்கே காணமுடிகிறது.

    இரும்புத்திரைக்கு பின் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த திரைப்படம் ஹீரோ! முழு சூப்பர் ஹீரோ திரைப்படமாக ஹீரோ இல்லை என்றாலும், திரைப்படம் வெகுவாக பலரை கவர்ந்தது. நடிகர் கார்த்தி நடிப்பில் இந்த ஆண்டு மட்டும் விருமன், பொன்னியின் செல்வன் என இரு திரைப்படங்கள் வெளிவந்த நிலையில் சர்தாரும் இந்த லிஸ்டில் சேரும் என தகவல்கள் வெளிவந்தது. 

    இதையும் படிங்க: முதன் முறையாக அரபு அமீரகத்தில் பறந்த சீனாவின் பறக்கும் கார்….

    இதைத்தொடர்ந்து, பி.எஸ்.மித்ரன், நடிகர் கார்த்திக்கை வைத்து ‘சர்தார்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தின் ட்ரைலர் கூட ரசிகர்களை கவர்ந்தது. தீபாவளிக்கு திரைப்படம் வெளிவரும் என்று கூறியிருந்தாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை.

    இந்நிலையில், ‘சர்தார்’ திரைப்படமானது அக்டோபர் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளிவரவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், இதே நாளில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பிரின்ஸ் திரைப்படமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....