Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்போராட்டத்தில் குதித்த மக்கள்....தடைப்பட்ட வெங்கட்பிரபு - நாக சைதன்யா படம்...

    போராட்டத்தில் குதித்த மக்கள்….தடைப்பட்ட வெங்கட்பிரபு – நாக சைதன்யா படம்…

    வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு கிராம மக்களின் போராட்டத்தால் தற்காலிகமாக தடைபட்டுள்ளது.

    மாநாடு, மன்மத லீலை போன்ற வெற்றி திரைப்படங்களுக்கு பிறகு இயக்குநர் வெங்கட் பிரபு தற்போது நாக சைதன்யா நடிக்கும் தெலுங்கு  படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் நாக சைன்யாவுக்கு ஜோடியாக க்ரீத்தி ஷெட்டி நடிக்கிறார். தற்காலிகமாக, இத்திரைப்படத்திற்கு NC22 என்று பெயரிடப்பட்டுள்ளது. 

    மேலும், நடிகர் ஜீவா இத்திரைப்படத்தில் வில்லனாக நடிப்பதாக தகவல்கள் தொடர்ந்து வலம் வந்துகொண்டிருக்கின்றன. இந்தப் படத்துக்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைக்கின்றனர்.

    இதையும் படிங்க:கலை கட்ட தொடங்கியுள்ள தீபாவளி; அரசு பேருந்துகளில் ஒரு லட்சம் பேர் முன்பதிவு!

    தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் இத்திரைப்படம் உருவாகும் என்று ரசிகர்கள் நினைக்க, இந்தப் படம் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

    மும்மரமாய் நடைபெற்று வரும் NC22 படத்தின் படப்படிப்பு தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்ற நிலையில் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு கர்நாடகா மாநிலம் மாண்டியா அருகே மேலக்கோட் பகுதியில் நடைபெற்று வருகிறது.

    மாண்டியா அருகே மேலக்கோட் பகுதியில் உள்ள கோவில் ஒன்றின் அருகே மிகப்பெரிய செட் போடப்பட்டு, அந்த செட்டில் NC22 படமாக்கப்பட்டு வந்துள்ளது. அந்த செட்டானது மதுபானக் கூட செட் என கூறப்படுகிறது.

    இந்த படப்பிடிப்பு செட்டானது, கோவிலுக்கு வரும் பக்தர்களின் மனதைப் புண்படுத்தும் நோக்கில் உள்ளதாக அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் படப்பிடிப்பு தடைபட்டுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....