Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபாம்பன் பாலத்தில் நேருக்கு நேராக மோதிக்கொண்ட பேருந்துகள்: நூலிழையில் உயிர் தப்பியது எப்படி ?

    பாம்பன் பாலத்தில் நேருக்கு நேராக மோதிக்கொண்ட பேருந்துகள்: நூலிழையில் உயிர் தப்பியது எப்படி ?

    பாம்பன் பாலத்தில் இன்று காலை இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.  

    ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலம் வரலாற்று புகழ் பெற்றவை என்பதை அனைவரும் அறிவர். இப்படியான பாலத்தின் இன்று விபத்து ஒன்று அரங்கேறியுள்ளது. 

    சென்னையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி தனியார் ஆம்னி பேருந்து இன்று காலை சென்று கொண்டிருந்தது. மற்றொரு அரசுப் பேருந்து ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. இரு பேருந்துகளும் பாம்பன் பாலத்தில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

    இதையும் படிங்க:உதவி மருத்துவர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியீடு…

    இந்த விபத்தில் தனியார் ஆம்னி பேருந்து பாலத்தின் தடுப்புச் சுவர் மீது மோதி நின்றதால் பெரும் விபத்து தடுக்கப்பட்டு பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 

    மேலும், இந்த விபத்தில் காயமடைந்த 10-க்கும் மேற்பட்ட பயணிகளை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு பொதுமக்கள் அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் தனியார் பேருந்தின் முன்பகுதி முழுவதுமாய் நொறுங்கியது. அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக விரைந்து செயல்பட்டு உதவினர். 

    இந்த விபத்தால் அப்பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....