Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்திரையரங்கில் ஜெயித்த 'வெந்து தணிந்தது காடு'-வின் ஓடிடி வருகை எப்போதென்று தெரியுமா?

    திரையரங்கில் ஜெயித்த ‘வெந்து தணிந்தது காடு’-வின் ஓடிடி வருகை எப்போதென்று தெரியுமா?

    நடிகர் சிம்பு நடிப்பில் வெளிவந்த ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து படக்குழு அறிவித்துள்ளது. 

    கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவான வெந்து தணிந்தது காடு கடந்த மாதம் செப்டம்பர் 15-ம் தேதி வெளியானது. இத்திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. திரைப்படத்தின் பாடல்களும், வசனங்களும் என வெந்து தணிந்தது காடு குறித்து நேர்மறை விமர்சனங்கள் குவிந்தன. 

    ரசிகர்கள் மட்டுமல்லாது, பல்வேறு திரைத்துறையினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் முன்னதாக வெளிவந்த திரைப்படங்கள் பெரியதாக வெற்றிப்பெறாத நிலையில், வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் வெற்றி அவருக்கும், அவரது ரசிகர்களுக்கும் ஊத்வேகத்தை கொடுத்துள்ளது.

    இதையும் படிங்க: கலை கட்ட தொடங்கியுள்ள தீபாவளி; அரசு பேருந்துகளில் ஒரு லட்சம் பேர் முன்பதிவு!

    இதைத்தொடர்ந்து, வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தொடர்ந்து ரசிகர்கள் சமூகவலைதளத்தில் கேள்விகளை முன்வைத்தனர். இந்நிலையில், படக்குழு ஓடிடி ரிலீஸ் குறித்து அறிவித்துள்ளது. 

    அதன்படி, நாளை அமேசான் பிரைமில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும்,  ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....