Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாதில்லியில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான டெங்கு பாதிப்பு; தமிழகத்தின் நிலை?

    தில்லியில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான டெங்கு பாதிப்பு; தமிழகத்தின் நிலை?

    தில்லியில் கடந்த ஆண்டில் மட்டும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

    தலைநகர் தில்லியில் கடந்த ஆண்டு மட்டும் 4 ஆயிரத்து 469 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் கடந்த ஆண்டில் மட்டும் டெங்கு பாதிப்பால் 9 பேர் உயிரிழந்தனர். குறிப்பாக கடந்த 2022-ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் மட்டும் 108 டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகி இருக்கின்றன. 

    அதேபோல் கடந்த ஆண்டு மட்டும் 262 மலேரியா காய்ச்சல் பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் மலேரியா பாதிப்பினால் ஒருவர் உயிரிழந்தார். அதே சமயம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் மட்டும் 5 பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தில்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

    தமிழகத்தைப் பொறுத்தவரையில், கடந்த ஆண்டும் மட்டும் 6,430 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கடந்த 2022 ஆம் ஆண்டு மட்டும் 3,601 பேர் ஸ்கரப் டிப்ஸ என்ற பாக்டீரியா தொற்று நோயாலும், 2337 பேர் லெப்டோஸ்பிரோசிஸ் எனப்படும் எலிக் காய்ச்சலாலும், 337 பேர் மலேரியா காய்ச்சலாலும், 173 பேர் சிக்கன் குனியா காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

    மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு; மின்தூக்கியில் சிக்கிய அமைச்சர் சிவசங்கர்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....