Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்யூடியூபில் சாதனை படைக்கும் வாரிசு டிரெய்லர்

    யூடியூபில் சாதனை படைக்கும் வாரிசு டிரெய்லர்

    நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படத்தின் டிரெய்லர் யூடியூப் தளத்தில் 22 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. 

    நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போகிறது. பொங்கலுக்கு வாரிசு திரைக்கு வருமென்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாரிசு திரைப்படத்தின் புரோமஷன் பணிகள் தீவிரத்தை அடைந்துள்ளது. 

    மேலும், வாரிசு திரைப்படத்தில் இருந்து சமீபத்தில் வெளிவந்த ‘ரஞ்சிதமே’, ‘தீ தளபதி’ மற்றும் ‘சூல் ஆஃப் தி வாரிசு’ போன்ற பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், சமீபத்தில் வாரிசு திரைப்படத்தின் முழு பாடல்களும் வெளியிடப்பட்டு அவையும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. 

    இதைத்தொடர்ந்து, பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று வாரிசு திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. பல திரையரங்குகள் வாரிசு திரைப்படத்தின் டிரெய்லரை ஒளிபரப்பின. டிரெய்லர் ஒளிபரப்பப்பட்ட திரையரங்குகளில் கூட்டமானது அதிகளவில் இருந்தது. 

    இந்நிலையில், வாரிசு திரைப்படத்தின் டிரெய்லரானது தற்போது வரை யூடியூபில் அதிக பார்வைகளை எட்டி சாதனை படைத்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, வாரிசு டிரெய்லர் 22 மில்லியன் பார்வைகளை எட்டியுள்ளது. 

    புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....