Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்ட டி.ராஜா - இவர் யார் தெரியுமா ?

    பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்ட டி.ராஜா – இவர் யார் தெரியுமா ?

    சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா இன்று பொறுப்பெற்றுக் கொண்டதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர் .

    முனீஸ்வா்நாத் பண்டாரி அவர்கள் கடந்த ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்று, பின்னர் கடந்த பிப்ரவரி 14ம் தேதி தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்று பணியாற்றி வந்தார் .

    இந்நிலையில் திரு முனீஸ்வா்நாத் பண்டாரி அவர்கள் செப்டம்பர் 12ம் தேதியுடன் ஓய்வு பெற்றதையடுத்து , அவரது பொறுப்பிற்கு எம் .துரைசாமி நியமிக்கப்பட்டார் .

    இதனையடுத்து கடந்த செப் 13-ஆம் தேதி அன்று உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி பதவியேற்றுக் கொண்டதையடுத்து , அவர் நேற்றுடன் (செப் 21) ஓய்வு பெற்றார் .

    இதையும் படிங்க: தற்காலிக ஆசிரியர்கள் உடனடியாக நியமிக்க புதிய உத்தரவு -பள்ளிக்கல்வித்துறை அதிரடி

    இந்நிலையில் எம்.துரைசாமி அவர்கள் ஓய்வு பெற்றதை தொடர்ந்து ,ஏற்கனவே சென்னை உயநீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக பணியாற்றி வரும் டி.ராஜா, இன்று பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்று அப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

    நீதிபதி டி.ராஜா அவர்கள் , மதுரை மாவட்டம், தேனுார் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். 1961 மே 25ல் பிறந்த இவர் 1988ல் வழக்கறிஞராக தனது பயணத்தை தொடங்கி ,2008-ஆம் ஆண்டு , தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக உயர்வு பெற்றவர் . கடந்த 2009 மார்ச் மாதத்தில் , சென்னை உயநீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு, பின் நிரந்தரம் செய்யப்பட்டு ,தற்போது பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது .

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....