Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்எண்ணெய் கிடங்கில் மின்னல் தாக்குதல்; இன்னலில் கியூபா

    எண்ணெய் கிடங்கில் மின்னல் தாக்குதல்; இன்னலில் கியூபா

    தென் அமெரிக்க நாடான கியூபாவில் உள்ள எண்ணெய்க் கிடங்கில் மின்னல் தாக்கியதில் ஏற்பட்ட விபத்தில் 121 பேர் காயமடைந்தனர். பலர் மாயமாகியுள்ளனர். 

    கியூபாவில் உள்ள மடான்சாஸ் சிட்டியில் உள்ள எண்ணெய் கிடங்கின் மீது எதிர்பாராத விதமாக கடந்த 6-ம் தேதி இரவு மின்னல் தாக்கியதில் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. மின்னல் தாக்கியதில் எண்ணெய் கிடங்கு முழுவதும் தீ பற்றி எரிந்தது.

    தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர். விபத்தினால் உண்டான கரும்புகைகள் சுமார் 100 கிமீ வரை பரவியுள்ளது.

    ஹெலிகாப்டரை கொண்டு நீரை பீய்ச்சி தொடர்ந்து தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது. எண்ணெய் கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்க, சர்வதேச நிபுணர்கள் மறும் உலக நாடுகளிடம் ஆலோசனைகளையும், உதவியையும் கியூபா கேட்டுக் கொண்டது. இந்நிலையில், 5 நாள்களாக தீயை அணைக்கும் முயற்சிகள் நீண்டுகொண்டே இருக்கிறது. 

    மேலும், உக்ரைன் ரஷ்ய போரால் பெரிதும் எரிபொருள் பற்றாக்குறையில் சிக்கியுள்ள கியூபா தற்போது இந்த எண்ணெய் கிடங்கு விபத்தினால் மேலும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளது. 

    வறட்சியால் கண்டுபிடிக்கப்பட்ட 450கிலோ வெடிகுண்டு; ஊரைவிட்டு வெளியேறிய மக்கள் – நடந்தது என்ன?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....