Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்வறட்சியால் கண்டுபிடிக்கப்பட்ட 450கிலோ வெடிகுண்டு; ஊரைவிட்டு வெளியேறிய மக்கள் - நடந்தது என்ன?

    வறட்சியால் கண்டுபிடிக்கப்பட்ட 450கிலோ வெடிகுண்டு; ஊரைவிட்டு வெளியேறிய மக்கள் – நடந்தது என்ன?

    உலகப்போர் முடிந்துவிட்டாலும், அவற்றின் தாக்கங்கள் இன்றும் நீடித்து வருவதை போர் நடைபெற்ற இடங்களைக் கொண்டு நம்மால் அறிய முடியும். அந்த வகையில், இரண்டாம் உலகப்போர் நடைபெற்று 70 வருடங்களுக்கு மேலாகியும், நேரடியாகவோ மறைமுகமாகவோ உலகப்போரின் தாக்கம் இன்னும் மக்களிடையே நீடித்து வருகிறது. 

    இந்நிலையில், இரண்டாம் உலகப்போரில் உபயோகப்படுத்தப்பட்டு ஆனால், வெடிக்காமல் இருந்த வெடிகுண்டு ஒன்று குறித்து திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. 

    அதன்படி, இரண்டாம் உலகப்போர் சமயத்தில் 27 லட்ச டன்னுக்கும் அதிகமான வெடிகுண்டுகள் ஐரோப்பிய கண்டம் முழுவதும் பரவலாக உபயோகப்படுத்தப்பட்டதாக தெரிகிறது. உபயோகப்படுத்தப்பட்ட அத்தனை வெடிகுண்டுகளும் வெடித்துவிட்டதா என்றால் நிச்சயம் இல்லை. 

    பெரும்பான்மையான வெடிகுண்டுகள் வெடிந்தாலும், பல வெடிகுண்டுகள் வெடிக்காமல் போர் முடிந்தப்பின்பும் போர் நடைபெற்ற இடங்களில் ஆங்காங்கே இருந்து வந்துள்ளன. 

    வெடிக்காத வெடிகுண்டுகள் பலவற்றை தேடிப்பிடித்து பின்னாளில் மீட்கப்பட்டாலும், மீதம் பல ஐரோப்பிய கண்டத்தில் ஆங்காங்கே இருப்பதாகவும், அவை இருக்கும் இடங்கள் தெரியாத வண்ணமும் இருந்தன. 

    இந்நிலையில், இருக்கும் இடம் தெரியாமல் இருந்த வெடிகுண்டு ஒன்று சமீபத்தில் இத்தாலியில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆம், ஐரோப்பிய கண்டம் சமீப காலமாக வெப்ப உயர்வில் சிக்கித் தவித்து வருகிறது. இந்த வெப்பநிலை உயர்வால், இத்தாலியில் உள்ள ‘போ’ எனும் நதி வறட்சியை சந்தித்து வருகிறது. 

    இந்த வறட்சிதான் தற்போது அந்த வெடிகுண்டை கண்டடைய ஏதுவாக இருந்தன. வறண்டுக்கொண்டிருக்கும் ‘போ’ நதியில், மீனவர் ஒருவர் 450 கிலோ எடைகொண்ட இதுவரை வெடிக்காத வெடிகுண்டு ஒன்றைக் கண்டுள்ளார். இதை, இவர் காவல்துறைக்கு தெரிவித்துள்ளார். அதன்பின்பு, இந்த தகவல் இத்தாலி நாட்டு ராணுவத்துக்குச் சென்றுள்ளது.

    இதன்பின்பு, அந்நாட்டு ராணுவம் இந்த வெடிகுண்டு இரண்டாம் உலகப்போரின்போது வீசப்பட்டது என்பதைக் கண்டறிந்தனர். அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட இந்த வெடிகுண்டை செயலிழக்க வைப்பதென்பது எளிமையான செயல் அல்ல என்பதையும் அவர்கள் உணர்ந்தனர். 

    ஆகவே, வெடிகுண்டு கண்டறியப்பட்ட விர்ஜிலியோ பகுதியில் வசித்து வந்த 3000 மக்களும் அப்பகுதியை விட்டு அப்புறப்படுத்தப்பட்டனர். வெளியுலகத்துக்கும் இந்தப்பகுதிக்கும் எவ்வித தொடர்பும் இல்லாதவாறு ராணுவம் பார்த்துக்கொண்டனர். 

    பின்பு, பல நாட்கள் கடுமையான மற்றும் ஆபத்தான வேலைப்பாடுகளுக்குப் பிறகு, அந்த வெடிகுண்டை விர்ஜிலியோவிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மெடோல் நகராட்சியில் உள்ள ஒரு குவாரிக்கு மாற்றினர். அங்கு அந்த வெடிகுண்டு இறுதியாக வெடித்தது.

    மேலும், இத்தாலியின் முக்கிய நதியாக கருதப்படும் ‘போ’ நதியின் வறட்சியால் இத்தாலி அரசு அந்த நதியைச் சுற்றியுள்ள சில பகுதிகளுக்கு கடந்த மாதம் அவசரநிலையை பிறப்பித்தது. இத்தாலியின் விவசாயத்துக்கு அதிகம் உதவும் நதிகளின் பட்டியலில் ‘போ’ நதி மூன்றாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

    கடலுக்கடியில் புதைந்துள்ள உலகப்போர் ஆயுதங்கள்; உயிரினங்களுக்கு ஆபத்து

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....