Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபறக்கும்போது புகை; அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

    பறக்கும்போது புகை; அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

    பறக்கும்போது கரும்புகை வந்ததால் அவசர அவசரமாக கோவையில் கோ ஏர்-43 விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது. 

    கோவை விமான நிலையத்திற்கு தினந்தோறும் இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

    இந்த நிலையில் இன்று காலை கோ ஏர்-43 என்ற விமானம் ஒன்று பெங்களூருவில் இருந்து 92 பயணிகளுடன் மாலி நாடு நோக்கி சென்று கொண்டிருந்தது.

    பறந்து கொண்டிருந்த சமயத்தில் கோ ஏர்-43  விமானத்தில் இருந்து திடீரென கரும்புகை எழுந்தது. இதனால் விமானத்தில் பயணித்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். அச்சமயத்தில், விமானம் கோவை சுற்றுவட்டாரப்பகுதிக்குள் பறந்து கொண்டிருந்ததால் உடனடியாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு கரும்புகை எழுவது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து கோ ஏர்-43 விமானம் கோவை விமான நிலையத்தில் இன்று (ஆகஸ்ட் – 12) மதியம் 12.57 மணியளவில் அவசரமாக தரையிரக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் ஏதும் நேரவில்லை. மேலும், விமானத்தில் இருந்து கரும்புகை கிளம்பியது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    எண்ணெய் கிடங்கில் மின்னல் தாக்குதல்; இன்னலில் கியூபா

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....