Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகாதலர் தினமா? பசு தினமா? - மத்திய அரசின் சுற்றறிக்கை சொல்வது என்ன?

    காதலர் தினமா? பசு தினமா? – மத்திய அரசின் சுற்றறிக்கை சொல்வது என்ன?

    காதலர் தினத்தன்று பசு அணைப்பு தினமாகக் கொண்டாட வேண்டும் என விலங்குகள் நல வாரியம் கோரிக்கை வைத்துள்ளது. 

    உலகம் முழுவதும் காதலர் தினம் பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. காதலர்கள் காதலர் தின வாரம் முழுவதும் பரிசு அளிப்பது, அன்பை பரிமாறிக் கொள்வது போன்றவற்றில் தங்களை அதிகம் ஈடுபடுத்திக் கொள்கின்றனர். 

    இந்நிலையில், மேற்கத்திய பண்பாடுகளில் நம் வேத கால பழக்கவழக்கங்கள் அழியும் நிலையில் இருப்பதாகவும், பசுவை அரவணைப்பதன் மூலமாக பேருவகையை அடைய முடியும் என்றும் விலங்குகள் நல வாரியம் நேற்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 

    பசுக்கள் பல பலன்களைத் தருவதால் பசுவை கட்டிப்பிடிப்பது மனரீதியான வளத்தை அதிகரிக்கும். இதனால் தனிநபர்கள் மற்றும் சமூகத்தில் மகிழ்ச்சி உண்டாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும் பசு மீது அன்பு கொண்டவர்கள் பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று பசு அணைப்பு தினமாக கொண்டாட வேண்டும் என விலங்குகள் நல வாரியம் கோரிக்கை வைத்துள்ளது. 

    பசுவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும் நல்ல சக்தி பரப்பும் வகையிலும் அந்த நாளை கொண்டாட வேண்டும் என்றும், இது மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் அடிப்படையிலும் முறையான ஒப்புதலுங் வெளியிடப்படுவதாகவும் விலங்குகள் நல வாரியம் தெரிவித்துள்ளது.

    இந்தியா vs ஆஸ்திரேலியா; இரண்டு விக்கெட்டுகளை பறித்த இந்திய பந்துவீச்சாளர்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....